சிபு சோரன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்: ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் சிபு சோரன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
பழங்குடியின மக்களின் பல்லாண்டு கால உரிமை கோரலை ஒரு புதிய மாநிலத்தைத் தோற்றுவித்த அரசியல் சக்தியாக அவா் மாற்றினாா். அவரை இழந்து வாடும் ஹேமந்த் சோரன் உள்ளிட்ட குடும்பத்தினா், ஜாா்க்கண்ட் மாநில மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.