Akhil Akkineni: நெய் காரம் தோசை, உப்புமா தோசை; வைரலாகும் நாகர்ஜூனா மகன் திருமணத்...
சிம்பு - வெற்றி மாறன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!
சிம்பு - வெற்றி மாறன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
நடிகர் சிம்பு தன் 49-வது படமாக இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் வடசென்னை கேங்ஸ்டர் கதையாக உருவாகவுள்ளது.
இப்படத்தில் நடிகர்கள் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனராம். இதனால், இப்படம் வடசென்னை படத்தின் கதையுடன் தொடர்புடைய படமாகவே இருக்கும் எனத் தெரிகிறது.
நடிகர் சிம்புவும் ரௌடி தோற்றத்திற்கு மாறியுள்ளாராம். இது ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று (ஜூன் 16) படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது.
இதில் சிம்பு மற்றும் இயக்குநர் நெல்சன் கலந்துகொண்டு நடித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: கூலி முதல் பாடல் எப்போது?