செய்திகள் :

Coolie: ``வில்லன் கதாபாத்திரத்திற்காக லோகேஷ் என்னிடம் வந்தபோது நான் சொன்ன விஷயம்!..'' - நாகர்ஜூனா

post image

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கூலி' திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவிருக்கிறது. ஆதலால், தற்போது 'கூலி' படத்தின் இறுதிகட்டப் பணிகளில் பிஸியாக இயங்கி வருகிறார் லோகேஷ்.

படத்தில் ரஜினியுடன் நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

'கூலி' ரஜினி

'கூலி' படத்தில் கேமியோ செய்திருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் ஆமீர் கான் பகிர்ந்திருந்தார். அதைத் தொடர்ந்து, 'குபேரா' படத்திற்காக நாகார்ஜுனா 'தி ஹாலிவுட் ரிப்போர்டர்' ஊடகத்தின் இந்தியப் பதிப்பிற்கு அளித்த பேட்டியில், 'கூலி' படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.

அந்தப் பேட்டியில் நாகார்ஜுனா பேசுகையில், "லோகேஷ் கனகராஜ் 'கூலி' படத்திற்காக என்னிடம் வந்ததற்கான காரணம் தெரியவில்லை.

ஆனால், அவர், 'வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உங்களுக்கு ஆட்சேபணை இருக்கிறதா? அப்படி இருந்தால், நாம் பேசிவிட்டு ஒரு கப் டீ குடித்துவிட்டு நான் கிளம்பிவிடுகிறேன்,' என்றார்.

நான் அவரிடம், 'நான் அதற்கு எதிராக இல்லை. ஆனால், முதலில் கதையைக் கேட்க வேண்டும்,' என்றேன். கதை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதனால், அவரை ஆறு முதல் ஏழு முறை மீண்டும் வரவழைத்து, என் கதாபாத்திரத்தைப் பற்றி பல விஷயங்களைப் பேசினேன்.

Nagarjuna
Nagarjuna

இப்போது யாராவது 'கூலி' படத்தில் என் கதாபாத்திரம் எப்படி இருந்தது என்று கேட்டால், ஒரு வார்த்தையில் 'சுதந்திரம்' எனப் பதிலளிப்பேன். படத்தில் நடிக்கும்போது எனக்கு எந்த அழுத்தமும் இல்லை.

'குபேரா' படத்தில் தீபக் கதாபாத்திரம் எப்போதும் ஒரு குறிப்பிட்ட விதத்தில் இருக்க வேண்டும். ஒரு கப் காபி குடிக்கும் விதத்தில்கூட கவனமாக இருக்க வேண்டும். ஆனால், 'கூலி' படத்தில் அப்படி கிடையாது. 'கூலி' திரைப்படம் எனக்கு விடுதலை அனுபவமாக இருந்தது," என்று கூறினார்.

Akhil Akkineni: நெய் காரம் தோசை, உப்புமா தோசை; வைரலாகும் நாகர்ஜூனா மகன் திருமணத்தின் உணவு மெனு!

நாகார்ஜுனா - அமலா தம்பதியின் மகனான அகில் அக்கினேனிக்கும் ஜைனப் ரவ்ட்ஜி என்பவருக்கும் கடந்த ஜூன் 6-ம் தேதி திருமணம் நடைபெற்றது. ஹைதராபாத்திலுள்ள நாகார்ஜுனாவின் இல்லத்தில் அகில் அக்கினேனியின் திருமணம் ம... மேலும் பார்க்க

``எனக்கு நடிக்கத் தெரியாதா?" -நடிகை அனுபமா வருத்தம்; சிம்ரன், நயன்தாராவிற்கும் இதுதான் நடந்தது!

பிரவீன் நாரயணன் இயக்கத்தில் சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன், திவ்யா பிள்ளை, ஸ்ருதி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ' Janaki vs State Of Kerala' திரைப்படம் வரும் ஜூன் 27ம் தேதி வெளியாகி... மேலும் பார்க்க

விஜய் சேதுபதி - பூரி ஜெகன்நாத் படம்: விரைவில் சென்னை ஷூட்டிங்; படத்தில் இணைந்த கன்னட பிரபலம் யார்?

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் 'ஏஸ்' திரைப்படம் வெளியாகியிருந்தது. இத்திரைப்படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை மாத ரிலீஸுக்கு... மேலும் பார்க்க

Paranthu Po: "உங்கள் காட்சிகள் வெறும் படம் அல்ல..." - 'டாடி ரொம்ப பாவம்' பாடலைப் பாராட்டிய சூரி

இயக்குநர் ராம் இயக்கத்தில்,மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பறந்து போ'. இத்திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.இதனிட... மேலும் பார்க்க

Rajini: 'ரொம்ப வருத்தமாக இருக்கு; இனிமேல் இப்படி...'- விமான விபத்து குறித்து ரஜினி

`வேட்டையன்' திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் `கூலி' திரைப்படம் வெளியாக இருக்கிறது. `லியோ' படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ச... மேலும் பார்க்க