செய்திகள் :

Rajini: 'ரொம்ப வருத்தமாக இருக்கு; இனிமேல் இப்படி...'- விமான விபத்து குறித்து ரஜினி

post image

`வேட்டையன்' திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த்  நடிப்பில் `கூலி' திரைப்படம் வெளியாக இருக்கிறது.

`லியோ' படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

ரஜினி - லோகேஷ் கனகராஜ் - கூலி
ரஜினி - லோகேஷ் கனகராஜ் - கூலி

அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். `கூலி' படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஜூன்17) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது ‘கூலி’, ‘ஜெயிலர்’ படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ ஆகஸ்ட் 15 ஆம் தேதி ‘கூலி’ படம் வெளியாகிறது. ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன”  என்று தெரிவித்திருக்கிறார்.

அகமதாபாத் விமான விபத்து
அகமதாபாத் விமான விபத்து

தொடர்ந்து அகமதாபாத் விமான விபத்து குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “ ரொம்ப வருத்தமாக இருக்கிறது. ஆண்டவன் அருளால் இனிமேல் நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

STR 49: வெற்றிமாறன், சிலம்பரசன் படப்பிடிப்பில் இயக்குநர் நெல்சன்; மற்ற நடிகர்கள் யார், யார்?

இயக்குநர் வெற்றி மாறன், சிலம்பரசன் கூட்டணி படத்தின் ஷூட்டிங்கில் நெல்சன் என புகைப்படம் ஒன்று, இன்று காலையில் இருந்தே வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்திற்கான அசத்தலான ஹேர் ஸ்டைலில் சிலம்பரசன் தன... மேலும் பார்க்க

Rajini: "'கண்ணப்பா' படத்தைப் பார்த்த பிறகு ரஜினிகாந்த்...." - நெகிழ்ந்த மோகன் பாபு

நாட்டாமை படத்தின் தெலுங்கு ரீமேக் ஆன 'பெத்தராயுடு' படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஓட்டி மோகன் பாபுவுடன் நடிகர் ரஜினிகாந்த் நேற்று (ஜூன் 16) கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.மேலும், மோகன் பாபுவ... மேலும் பார்க்க

Keerthi Pandian: 'எனக்கு கார் ரேஸர் ஆகணும்கிறதுதான் ஆசை, ஆனா...' - கீர்த்தி பாண்டியன்

கீர்த்தி பாண்டியன் தற்போது ‘அஃகேனம்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். உதய் கே இப்படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தில் அருண் பாண்டியன், ரமேஷ் திலக், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இ... மேலும் பார்க்க

Jonita Gandhi: "சமூக வலைதளங்களில் பாலியல் ரீதியான தொல்லைகள் நிறைய நடக்கின்றன" - பாடகி ஜொனிதா காந்தி

பஞ்சாப் குடும்பத்தில் பிறந்து கனடாவில் படித்து வளர்ந்து, இப்போது இந்திய அளவில் பிரபல பாடகியாக இருப்பவர் ஜொனிதா காந்தி. ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கச்சேரியில் சிவாஜி படத்தில் இடம்பெற்ற 'அதிரடிக்காரன்' பாடலை ம... மேலும் பார்க்க

Tourist Family: 'அவருடைய அந்த ஒரு புன்னகை என்னை...'- ரஜினியின் பாராட்டு குறித்து நெகிழும் இயக்குநர்

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பல... மேலும் பார்க்க

Dhanush: "எனக்காக எண்ணற்ற தியாகங்கள் செய்தவர்; என் அப்பாதான் என்னோட ஹீரோ" - நடிகர் தனுஷ்

அப்பாவின் அன்பு எப்போதும் பெரிதாகக் கொண்டாடப்படாத ஒன்று. அந்த அன்பெனும் தோளில்தான் நம் வாழ்க்கை அமர்ந்திருக்கும் என்பதை நாம் அப்பாவாகும்போதுதான் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். அப்பாக்கள் இருக்கும... மேலும் பார்க்க