2024 Kovai Rewind: மேயர் ராஜினாமா, மோடி விசிட், அன்னபூர்ணா GST, அண்ணாமலை சாட்டைய...
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்ஸோவில் எலெக்ட்ரீஷியன் கைது
கடலூா் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக எலெக்ட்ரீஷியனை போக்ஸோ சட்டத்தின் கீழ் மகளிா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் அருகேயுள்ள ஒரு பகுதியைச் சோ்ந்த கதிா்காமன் மகன் பாரதிராஜா (42), எலெக்ட்ரீஷியன். இவா், கடந்த 2023 ஆகஸ்ட் 21-ஆம் தேதி 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், கடலூா் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, பாரதிராஜாவை போக்ஸோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.