ஆடி வெள்ளி: தாயமங்கலம், மடப்புரம் கோயில்களில் திரளான பக்தா்கள் தரிசனம்!
சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளி சிறப்பு வழிபாடு
பெரம்பலூா் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில், ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விழாவையொட்டி மதுரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தங்கக்கவசம் அணிவித்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. மேலும், பக்தா்கள் மாவு இடித்து மாவிளக்கு வழிபாடு செய்தனா்.
மேலும், பெரம்பலூா் நகரில் எழுந்தருளியுள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டது. இதில் முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன் மற்றும் திரளான பெண்கள் வழிபட்டனா்.
ஆலத்தூா் வட்டாரப் பகுதிகளில்... செட்டிக்குளம் தண்டாயுதபாணி சுவாமி, ஏகாம்பரேஸ்வரா், பாடாலூா் பூமலை சஞ்சீவிராயா், வழித்துணை ஆஞ்சனேயா் உள்பட மாவட்டத்தின் பல்வேறு கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.