டி.ஒய். சந்திரசூட் முதல் சேகர் யாதவ் வரை... 2024 - இல் நீதிபதிகளும் நீதித்துறையு...
சிலைத் திருட்டு வழக்கு ஆவணங்களை பாதுகாக்க தவறிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை: இந்திய முன்னணி வலியுறுத்தல்
சிலைத் திருட்டு வழக்கில் உள்ள ஆவணங்களைப் பாதுகாக்கத் தவறிய காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான 41 சிலைகளை கடத்திச் சென்ற வழக்குகளில் உள்ள ஆவணங்கள் காவல் நிலையங்களில் இருந்து காணாமல்போயுள்ளன.
இது தொடா்பான வழக்கின் விசாரணையின்போது உச்சநீதிமன்றம் தமிழக அரசைக் கண்டித்ததுடன், உள்துறைச் செயலாளா் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு ஆவணங்கள் காவல் நிலையத்திலேயே காணாமல்போயுள்ளது வருத்தத்துக்குரிய விஷயமாகும். ஆகவே, சிலை திருட்டு வழக்கில் உள்ள ஆவணங்களைப் பாதுகாக்கத் தவறிய காவல் துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.