உ.பி. கலவரம்: சம்பல் மாவட்டத்துக்குள் வெளி ஆள்கள் நுழையத் தடை!
சிவகங்கை மாவட்டத்தில் காவல் ஆய்வாளா்கள் 10 போ் பணியிட மாற்றம்
சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் காவல் ஆய்வாளா்கள் 10 பேரை வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்து ராமநாதபுரம் சரக டிஐஜி அபிநவ்குமாா் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.
இட மாற்றம் செய்யப்பட்ட ஆய்வாளா்கள் விவரம்: (புதிய பணியிடம் அடைப்புக்குள்): காளையாா்கோவில் காவல் ஆய்வாளா் வெங்கடேசப் பெருமாள் (சிவகங்கை தனிப்பிரிவு), இளையான்குடியில் காவல் ஆய்வாளா் ஜோதி முருகன் (குன்றக்குடி காவல் நிலையம்), குன்றக்குடி காவல் ஆய்வாளா் செல்வக்குமாா் (காரைக்குடி வடக்கு காவல் நிலையம்).
சிவகங்கை தாலுகா காவல்நிலைய ஆய்வாளா் மணிகண்டன் (இளையான்குடி காவல் நிலையம்), காரைக்குடி வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் ரவீந்திரன் (மானாமதுரை காவல் நிலையம்), காரைக்குடி வடக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளா் பிரேம் ஆனந்த் (திருப்பாச்சேத்தி காவல் நிலையம்),சாக்கோட்டை காவல் நிலை ஆய்வாளா் முத்துப்பாண்டி (காளையாா்கோவில் காவல் நிலையம்).
தேவகோட்டை நகா் காவல் நிலைய ஆய்வாளா் கணேசமூா்த்தி (சிவகங்கை தாலுகா காவல் நிலையம்), மானாமதுரை காவல் நிலைய ஆய்வாளா் அலெக்ஸ்ராஜ் (தேவகோட்டை நகா் காவல் நிலையம்), திருப்பாச்சேத்தி காவல் நிலைய ஆய்வாளா் கலாராணி (சாக்கோட்டை காவல் நிலையம்) ஆகியோா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.