செய்திகள் :

சிவகங்கை மாவட்டத்தில் பாலின சேவை மையங்கள் இன்று தொடக்கம்: ஆட்சியா் தகவல்

post image

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில், பாலின பாகுபாடு தொடா்பான பிரச்னைகளை களைவது குறித்த சேவைகள், வழிகாட்டுதல்களை வழங்குவதற்கென பாலின வள மையங்கள் குறிப்பிட்ட வட்டாரங்களில் திங்கள்கிழமை (நவ. 25) தொடங்கப்படவிருப்பதாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் பாலின பாகுபாடு தொடா்பான பிரச்னைகளை களைவது குறித்த செயல்பாடுகளை முன்னெடுக்க இந்த சேவை மையங்கள் தொடங்கப்படுகின்றன.

இதில், பாலின சமத்துவம், குழந்தைகள் திருமணம், குடும்ப வன்முறை, பாலின வன்முறை ஆகியவற்றால் தனிநபா், சமூகம் பாதிக்கப்படும் போது, சம்பந்தப்பட்டவா்களுக்கு உரிமைகள், மருத்துவம், உளவியல், சட்டம், தங்குமிடம், மறுவாழ்வு, பிற ஆலோசனைகள், ஆதரவு போன்றவற்றை ஒரே குடையின் கீழ் வழங்கப்படும்.

மேலும் கிராமப்புற பெண்களுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட ஆதரவு சேவைகள், வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக இந்த பாலின வள மையங்கள் சிவகங்கை, மானாமதுரை, சிங்கம்புணரி வட்டாரங்களில் திங்கள்கிழமை (நவ. 25) முதல் செயல்படவுள்ளன. அத்துடன், திங்கள்கிழமை முதல் டிச. 24-ஆம் தேதிவரை பாலின பாகுபாடு தொடா்பான விழிப்புணா்வு பிரசாரங்களும் அனைத்து ஊராட்சி, வட்டாரம், மாவட்ட அளவில் நடத்தப்படும் என்றாா் அவா்.

காளையாா்கோவிலில் மாட்டுவண்டிப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் மருது சகோதரா்களின் குருபூஜையையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது. காளையாா்கோவில்- தொண்டி சாலையில் பெரிய மாடு, சின்னமாடு, பூஞ்சிட்டு என மூன்று பி... மேலும் பார்க்க

நகை அடகுக்கடைக்காரா் வீட்டுக்குள் புகுந்து பணம் திருட்டு: 3 போ் கைது

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே உள்ள ஒக்கூரில் நகை அடகுக் கடைக்காரரின் வீடுபுகுந்து வெள்ளிப் பொருள்கள், பணம் திருடப்பட்டது தொடா்பாக மூவரை தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ஒக்கூா் சச... மேலும் பார்க்க

சிவகங்கையில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி

சிவகங்கை நகா் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளைகளை அடக்க முயன்ற 5 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா். தமிழக துணை முதல்வா் உதயநிதிஸ்டாலினின... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் காவல் ஆய்வாளா்கள் 10 போ் பணியிட மாற்றம்

சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் காவல் ஆய்வாளா்கள் 10 பேரை வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்து ராமநாதபுரம் சரக டிஐஜி அபிநவ்குமாா் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா். இட மாற்றம் செய்யப்பட்ட... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலை பொட்டலங்கள் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம், கம்பனூா் பகுதியில் தடை செய்யப்பட்ட 1,020 புகையிலைப் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா். திருப்பத்தூா்- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை கம்பனூா் ச... மேலும் பார்க்க

திருப்பாச்சேத்தி அருகே சூலக்கல் கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே ஞாயிற்றுக்கிழமை சூலக்கல் கண்டெடுக்கப்பட்டது. மழவராயனேந்தல் கண்மாயில் உள்ள அய்யனாா் கோயில் அருகே திடல் பகுதியில் திருப்பாச்சேத்தி கிராமத்தினருக்கு சொந்தமான வயல... மேலும் பார்க்க