செய்திகள் :

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஜெயம் ரவி?

post image

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ஜெயம் ரவி நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமரன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பெரிய நட்சத்திர நடிகராக வளர்ந்துள்ளார். இப்படத்திற்குப் பின் தன் சம்பளத்தையும் ரூ. 60 கோடி வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.

அமரன் படத்தை முடித்தபின் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸின் படமொன்றில் நடித்து வருகிறார். எஸ்கே - 23 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க: நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் அடுத்த பாடல் அறிவிப்பு!

இதைத் தொடர்ந்து, இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இது நடிகர் சூர்யா நடிக்க வேண்டிய கதையாம். இப்படத்தின் முன்தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் - சுதா கொங்காரா படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயம் ரவியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அதர்வாவும் நடிக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் படத்தில் ஜெயம் ரவி இணைந்திருக்கும் தகவல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தசரா இயக்குநருடன் அடுத்த படத்தை அறிவித்த சிரஞ்சீவி!

நடிகர் சிரஞ்சீவி தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர். 1980-களிலிருந்து நடித்துவருபவர் பல நல்ல கதைகளில் நடித்து தனக்கான ரசிகர்களை உருவாக்கினார்.தற்போதுவரை, 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்... மேலும் பார்க்க

இளையராஜா இசையில் திருக்குறள் திரைப்படம்!

பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்கிய ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் இயக்கத்தில் திருக்குறள் படம் உருவாகிவருகிறது. இந்தப் படத்தில் வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.... மேலும் பார்க்க

உலக செஸ் சாம்பியன்ஷிப்: 7-வது சுற்றும் டிராவில் முடிந்தது!

ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இன்று நடைபெற்ற 7-வது சுற்று டிரா செய்யப்பட்டது.சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனும், கிராண்ட... மேலும் பார்க்க

புஷ்பா - 2 முன்பதிவில் ரூ.100 கோடி வசூல்..! அதிகாரபூர்வ அறிவிப்பு!

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா - 2 திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி உலகளவில் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தெலங்கானா உள்ளிட்ட சில பகுதிகளில் டிச. 4 ஆம் ... மேலும் பார்க்க

கதாபாத்திரங்களுக்கு உயிர்க்கொடுப்பவர் ரன்பீர்..! சீரியலில் ராமனாக அசத்தியவர் பாராட்டு!

தொலைக் காட்சி தொடராக 2008இல் வெளியான ராமாயணம் சீரியலில் நாயகன் ராமன் ஆக நடித்தவர் நடிகர் குர்மீட் சௌதரி. இதை ராமானந்த் சாகர் இயக்கியிருந்தார். 300 எபிசோடுகள் வெளியான இந்தத் தொடர் பல மொழிகளில் டப் செய்... மேலும் பார்க்க

புஷ்பா - 2 மேக்கிங் விடியோ!

புஷ்பா - 2 திரைப்படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது. நடிகர் அல்லு அர்ஜுன் - சுகுமார் கூட்டணியில் உருவான புஷ்பா - 2 படத்தின் மேல் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படம் நாளை (டிச. 4) இரவு... மேலும் பார்க்க