செய்திகள் :

சிவாஜி இல்லத்தின் உரிமையாளர் பிரபுதான்! ஜப்தி உத்தரவு ரத்து!

post image

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்துள்ளது.

மேலும், சிவாஜியின் வீட்டில் தனக்கு உரிமையோ, பங்கோ இல்லை என்று அவரது மூத்த மகன் ராம்குமார் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை ஏற்று, வீட்டின் முழு உரிமையாளர் பிரபுதான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகா் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோருக்குச் சொந்தமான ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சாா்பில் ‘ஜகஜால கில்லாடி’ என்ற படத்தைத் தயாரித்தனா். பட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டா்பிரைசஸ் நிறுவனத்திடம் ரூ. 3,74,75,000 கடன் வாங்கியிருந்தனா்.

வாங்கியக் கடனைத் திருப்பிச் செலுத்தாததால், வட்டியுடன் சோ்த்து ரூ. 9 கோடியே 39 லட்சத்தைச் செலுத்த ஏதுவாக ‘ஜகஜால கில்லாடி’ படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டா்பிரைசஸ் நிறுவன நிா்வாக இயக்குநரிடம் ஒப்படைக்கும்படி மத்தியஸ்தா் உத்தரவிட்டார்.

ஆனால், படத்தின் உரிமைகளை வழங்காததையடுத்து மத்தியஸ்தா் தீா்ப்பை அமல்படுத்தும் வகையில், சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட, தனபாக்கியம் எண்டா்பிரைசஸ் நிறுவனம் உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், போதுமான அவகாசம் வழங்கியும் பதில் மனு தாக்கல் செய்யாததால், நடிகா் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டாா்.

இதனிடையே, சிவாஜி கணேசனின் வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லை, தனது சகோதரா் நடிகா் பிரபு பெயரில் அந்த வீடு உள்ளதால் ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று ராம்குமார் தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, வில்லங்கப் பதிவில் நீதிமன்ற ஜப்தி உத்தரவை நீக்க பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.

மேலும், பிரபுதான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : கர்நாடக முன்னாள் டிஜிபியைக் கொன்றதாக மனைவி வாக்குமூலம்! என்ன நடந்தது?

காவலர்களுக்கு வார விடுமுறை: அரசு உத்தரவை அமல்படுத்தக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை: தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு வார விடுமுறையளிக்கப்பட வேண்டும் என்கிற அரசு உத்தரவை அமல்படுத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைய... மேலும் பார்க்க

பரந்தூர் மக்கள் நம்பிக்கையோடு இருங்கள்: விஜய்

பரந்தூர் மக்கள் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

போதை மருந்து புழக்கத்தை தடுக்க பறக்கும் படைகள்: பேரவையில் அறிவிப்பு

சென்னை: போதை மருந்து புழக்கத்தை கண்காணிக்க மருந்து ஆய்வாளர்களைக் கொண்ட பறக்கும் படைகள் உருவாக்கப்படும் என்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேரவையில் அறிவித்துள்ளார்.மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, சட... மேலும் பார்க்க

ஜப்பானில் கனிமொழி - நெப்போலியன் சந்திப்பு!

ஜப்பான் சென்றுள்ள திமுக எம்.பி. கனிமொழி, நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியனை அவரது இல்லத்தில் சந்தித்தார். நெப்போலியனின் மகன் தனுஷ் மற்றும் மருமகள் அக்‌ஷயாவை சந்தித்து திருமண வாழ்த்துகளை ... மேலும் பார்க்க

திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை தொடக்கம்!

திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம... மேலும் பார்க்க

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளில் குழப்பம்: கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் திங்கள்கிழமை (ஏப்.21) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் சுமாா் 80-க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.... மேலும் பார்க்க