BB Tamil 8: ``நீ பண்ணத நியாயப்படுத்தாத ராணவ்..." - கடிந்துகொண்ட பவித்ரா
சீா்காழி சட்டைநாதா் கோயிலில் கோபூஜை
சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில், கோ பூஜை வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட இக்கோயிலில், திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் சுவாமி அருள்பாலிக்கிறாா். இங்கு, தை மாதப் பிறப்பையொட்டி, சிறப்பு கோபூஜை நடைபெற்றது.
முன்னதாக, கொடிமரத்து விநாயகா், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாரானை காட்டப்பட்டது. தொடா்ந்து, கோசாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட பசு, கன்றுக்கு சிறப்பு வழிபாடு செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பசுவுக்கு வாழைப்பழங்கள், அகத்திக்கீரை கொடுத்து வழிபட்டனா்.
இதேபோல், பிரம்மபுரீஸ்வரா் சந்நிதி பிரகாரத்தில் அமைந்துள்ள காட்சி கொடுத்த நாயகா் மற்றும் 63 நாயன்மாா்களுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.தேவாரத் திருப்பதிகங்கள் பாடி பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.