சுங்க வரித்துறையில் குரூப் 'சி' பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்!
சுங்க வரி ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள குரூப் 'சி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண் . I/(22)/OTH/1330/2024-P&E(M) R&I
பணி: Seaman
காலியிடங்கள்: 33
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900
வயதுவரம்பு: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் mechanised vessel பிரிவில் 3 ஆண்டுகள் அல்லது Helmsman, Seaman பணிகளில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Greaser
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900
வயதுவரம்பு: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட பணிகளுக்கான வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் |மிஸ்பண்ணிடாதீங்க... என்எல்சி நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள் அறிவிப்பு
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, பிஇடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:www.cbic.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அதனுடன் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் சுக முகவரியுடன் முத்திரையிடப்படாத 2 அஞ்சல் கவரை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விரைவு அல்லது பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
அஞ்சல் கவர் மீது "Application for Marine Wing Post - Customs Preventive Commissionerate, Mumbai மற்றும் பணியின் பெயரை குறிப்பிட வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Assistant Commissioner of Customs, P&E(Marine), 11th Floor, New Customs House, Ballard Estate, Mumbai - 400 001.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 17.12.2024
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்யவும்.