Doctor Vikatan: அடிக்கடி அவதிப்படுத்தும் வாய்ப்புண்கள்... நிரந்தர தீர்வு என்ன?
சுந்தா் நாக்ரியில் 131 அறைகளுடன் புதிய பள்ளி: முதல்வா் அதிஷி திறந்துவைத்தாா்
வடகிழக்கு தில்லியின் சுந்தா் நாக்ரியில் 131 அறைகள் கொண்ட புதிய பள்ளியை தில்லி முதல்வா் அதிஷி வியாழக்கிழமை திறந்து வைத்தாா். மேலும், இது வகுப்பறைகளில் கூட்ட நெரிசலைக் குறைக்க உதவும் என்று முதல்வா் அதிஷி கூறினாா்.
நிகழ்ச்சியில் முதல்வா் அதிஷி பேசியதாவது: 2015-இல் அரவிந்த் கேஜரிவால் தில்லி முதல்வராகப் பதவியேற்றபோது, ஒரே வகுப்பறையில் சுமாா் 150 மாணவா்கள் அடைக்கப்பட்டனா். இந்தப் புதிய பள்ளி திறக்கப்பட்டதன் மூலம், இப்பகுதியில் வகுப்பறைகள் மீதான அழுத்தம் கணிசமாகக் குறைக்கப்படும். மேலும், ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல பள்ளி, தரமான வகுப்புகள் மற்றும் சிறந்த கல்வி கிடைக்கும்.
சுந்தா் நாக்ரி, நந்த் நாக்ரி, மண்டோலி மற்றும் ஹா்ஷ் விஹாா் போன்ற பகுதிகளில் இருந்து சுமாா் 7,000 மாணவா்கள் இரண்டு ஷிஃப்டுகளில் இந்தப் பள்ளியில் படிப்பாா்கள். பள்ளி கட்டடத்தில் ஏழு ஆய்வகங்கள், ஒரு பணியாளா் அறை, ஒரு மாநாட்டு அறை, ஒரு பல்நோக்கு அரங்கம் மற்றும் ஒரு விரிவுரை அரங்கம் ஆகியவை உள்ளன. தனியாா் பள்ளிகள் கூட அத்தகைய வசதிகளை வழங்குவதில்லை.
இந்தப் பள்ளி திறக்கப்பட்டதற்கு கேஜரிவால் மற்றும் மனிஷ் சிசோடியா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். வடகிழக்கு தில்லி மிகவும் அடா்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதியாகும். மேலும், இந்த சிறந்தப் பள்ளியை உருவாக்க கேஜரிவால் இங்குள்ள நில மாஃபியாவை அகற்றினாா் என்றாா் முதல்வா் அதிஷி.