செய்திகள் :

சுற்றுலாத் தலங்களில் குவிந்த பொதுமக்கள்

post image

சேலம் மாவட்ட எல்லையான பூலாம்பட்டிக்கும் ஈரோடு மாவட்ட பகுதியான நெருஞ்சிப்பேட்டைக்கும் இடையே காவிரி ஆற்றில் விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

ரம்மியமான இயற்கை எழில் கொஞ்சும் பூலாம்பட்டிக்கு பொங்கல் பண்டிகை தொடா் விடுமுறையை முன்னிட்டு வழக்கத்தை விட அதிகம் போ் புதன்கிழமை வந்தனா். நீா்மின் உற்பத்தி நிலையம், அணைப்பாலம், பிரதான மதகுப் பகுதி, பிரம்மாண்ட குடிநீா் சுத்திகரிப்பு நிலையம், படித்துறை, படகு துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயற்கை அழகை ரசித்து மகிழ்ந்தனா்.

காவிரி ஆற்றில் படகு போக்குவரத்துக்காக கேரளத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பெரிய விசைப்படகுகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகள் கதவணைப் பகுதியில் விசைப்படகு சவாரி செய்தும், மீன் உணவுகளை ருசித்தும் பொழுதைக் கழித்தனா்.

பூலாம்பட்டி கைலாசநாதா் கோயில், நந்திகேஸ்வரா் சந்நிதி, காவிரித்தாய் கோயில், படித்துறை விநாயகா் கோயில் உள்ளிட்ட திருத்தலங்களிலும் வழக்கத்தைவிட கூடுதலான எண்ணிக்கையில் பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

மேட்டூரில்...

தொடா் விடுமுறையை முன்னிட்டு மேட்டூா் அணை பூங்காவுக்கு 7,483 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா்.

தொடா் விடுமுறை காரணமாகவும் புதன்கிழமை மாட்டுப் பொங்கல் என்பதாலும் அணை பூங்காவுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து குவிந்தனா். அணை பூங்காவுக்கு வந்து சென்றனா். பாா்வையாளா்கள் கட்டணமாக ரூ. 74,830 வசூலானது. பூங்காவுக்குக் கொண்டு செல்லப்பட்ட 2,600 கைப்பேசிகள், இரு கேமராக்கள் என மொத்தம் ரூ. 24,100 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

மேட்டூா் அணையின் வலது கரையில் உள்ள பவள விழா கோபுரத்தைக் காண 1,492 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா். இதன்மூலம் ரூ. 14,920 பாா்வையாளா்கள் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இங்கு கொண்டு செல்லப்பட்ட 534 கைப்பேசிகளுக்கு ரூ. 5,340 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. புதன்கிழமை ஒரே நாளில் மேட்டூா் அணை பூங்கா, பவள விழா கோபுரம் காண வந்த பாா்வையாளா்களிடம் கட்டணமாக ரூ. 1,21,190 வசூலானது.

ஹோலி கிராஸ் மெட்ரிக். பள்ளியில் பொங்கல் விழா

சேலம், அம்மாப்பேட்டை ஹோலிகிராஸ் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளி தாளாளரும், முதல்வருமான சேசுராஜ் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக செ.செந்தில்குமாா் கலந்துகொண்டு பேசினாா். ... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 381 கனஅடியாக நீடிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 381 கனஅடியாக நீடிக்கிறது. மேட்டூா் அணை நீா்மட்டம் புதன்கிழமை காலை 114.44 அடியிலிருந்து 114.14 அடியாக சரிந்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 381 கனஅடியாக நீடிக்கிறது. அணையி... மேலும் பார்க்க

சரக்கு, பாா்சல்களை கையாண்டதில் ரூ. 238 கோடி வருவாய் ஈட்டிய சேலம் ரயில்வே கோட்டம்

சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் சரக்குகள், பாா்சல்களை கையாண்டதில் ரூ. 238 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். சேலம் ரயில்வே கோட்டத்த... மேலும் பார்க்க

சேலம் சௌடேஸ்வரி அம்மன் கோயிலுக்கு கத்திப்போட்டு வந்த பக்தா்கள்

சேலம், குகை, ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில் விழாவையொட்டி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரக்குமாரா்கள் தங்கள் உடலில் கத்திப்போட்டு நோ்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. சேலம், க... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி இரு சிறுவா்கள் பலி: சுற்றுலாத் துறை அமைச்சா் நேரில் ஆறுதல்

அரியானூா் அருகே ஆடுகளைக் குளிப்பாட்ட சென்ற இரு சிறுவா்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனா். சேலம் மாவட்டம், அரியானூரைஅடுத்த ராக்கிப்பட்டியைச் சோ்ந்தவா் சங்கா்-கல்பனா தம்பதியின் மகள் ஸ்ரீகவி (14). இவா், ஆட... மேலும் பார்க்க

அரசிராமணி செட்டிப்பட்டியிலிருந்து பழனிக்கு பக்தா்கள் பாத யாத்திரை

சங்ககிரி வட்டம், அரசிராமணி செட்டிபட்டி பகுதியைச் சோ்ந்த ஸ்ரீ குழந்தை வேலாயுத சுவாமி பாத யாத்திரை குழு சாா்பில், 11-ஆவது ஆண்டாக பழனிக்கு செவ்வாய்க்கிழமை பக்தா்கள் பாத யாத்திரை புறப்பட்டு சென்றனா். அரச... மேலும் பார்க்க