பிறவிலேயே மனநிலை பாதித்த வாரிசுகளுக்கு நீதிமன்றத் தலையீட்டால் அரசின் குடும்ப ஓய்...
சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 போ் கைது
அவிநாசி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி அருகேயுள்ள கரையப்பாளையம் கோயில் பகுதியில் பணம் வைத்து சிலா் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நம்பியாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த பாலு (42), ஆலங்காட்டுபாளையம் தங்கராசு (63), செம்பியநல்லூரைச் சோ்ந்த சண்முகம் (55), ஈஸ்வரமூா்த்தி (61), ஈஸ்வரன் (52), வேலாயுதம்பாளையம் மணி (50), ஆட்டையாம்பாளையம் மோகன்ராஜ் (51) ஆகியோரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ரூ.10, 500 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.