செய்திகள் :

சூது கவ்வும் - 2 ஓடிடி வெளியீட்டுத் தேதி!

post image

சூது கவ்வும் - 2 திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013 ஆம் அண்டு விஜய் சேதுபதி நடிப்பில் சூது கவ்வும் திரைப்படம் வெளியானது. இதில் சஞ்சிதா ஷெட்டி, ரமேஷ் திலக், அசோக் செல்வன், பாபி சிம்ஹா, கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு, டிசம்பர் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இதையும் படிக்க: தனுஷ் கைவசம் இத்தனை படங்களா?

இதில் நாயகனாக மிர்ச்சி சிவா நடித்து உள்ளார். படத்தின் முதல் பாகத்தை நலன் குமாரசாமி இயக்கியிருந்த நிலையில், இரண்டாம் பாகத்தை எஸ்.ஜே. அர்ஜுன் இயக்கியுள்ளார்.

ஹரிஷா, ராதாரவி, கருணாகரன், எம்எஸ் பாஸ்கர், கராத்தே கார்த்தி, ரமேஷ் திலக், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

சூது கவ்வும் - 2 திரைப்படம் பொங்கலையொட்டி, நாளை (ஜன. 14) ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகிறது.

வெள்ளக்கோவிலில் தனியார் மதுபானக் கூடம் அமைக்க மக்கள் எதிர்ப்பு!

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் தனியார் மதுபானக் கூடம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் சாலையில் நகரின் ... மேலும் பார்க்க

2015-ல் காவலரைத் தாக்கிய நபருக்கு 1 ஆண்டு சிறை!

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு காவலரைத் தாக்கிய நபருக்கு தற்போது 1 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த 2015 ஆம் ஆண்டு நவி மும்பை பகுதியில் அனகா விவேக் காளே என்ற பெண்... மேலும் பார்க்க

5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று(ஜன. 14) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:தென்கிழ... மேலும் பார்க்க

பிக் பாஸில் முதல்முறை... பணப்பெட்டியை எடுத்துச் செல்பவரும் போட்டியில் தொடரலாம்!

பிக் பாஸ் நிகழ்ச்சி வரலாற்றில் முதன்முறையாக பணப்பெட்டியை எடுத்துச் செல்பவரும் போட்டியில் தொடரலாம் என்ற புதிய விதியை அறிவித்துள்ளார் பிக் பாஸ்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 8 ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: திரிணாமுல் காங். நிர்வாகி சுட்டுக்கொலை!

மேற்கு வங்கம் மாநிலத்தில் திரிணாமுல் காங். கட்சியின் நிர்வாகி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாகிச் சூட்டில் 2 பேர் படுகாயமடைந்தனர்.மால்டா மாவட்டத்தின் கலியாசக் பக... மேலும் பார்க்க

”பேச்சில் இரட்டை அர்த்தங்கள் இல்லை எனச் சொல்ல முடியாது” ஹனி ரோஸ் வழக்கில் பாபி செம்மனூருக்கு ஜாமீன்!

மலையாள நடிகை ஹனி ரோஸின் பாலியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட பாபி செம்மனூருக்கு கேரள உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.பாபி செம்மனூர் தன்னைக் குறிவைத்து சமூக வலைதளங்களில் பாலியல் ரீதிய... மேலும் பார்க்க