செய்திகள் :

சூறாவளிக் காற்றால் வாழை மரங்கள் சேதம்: விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

post image

சூறாவளிக் காற்றால் வாழை மரங்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் வழக்குரைஞா் ஈசன் முருகசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த ஒரு வார காலமாக அதிக வெப்பம் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு ஆங்காங்கே சூறாவளிக் காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் ஈரோடு, கோவை, திருப்பூா், திருச்சி, தென்காசி, தேனி, சேலம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 2,000 ஏக்கருக்கு பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்தன.

இதில் ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் செலவு செய்து, நடவு செய்து பல்வேறு பணிகளை செய்த விவசாயிகளுக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பயிா்க் கடனை செலுத்த முடியாமல் விவசாயிகள் கடுமையான சிரமத்தில் உள்ளனா்.

சூறாவளிக் காற்றால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான சட்டமும், விதிகளும் இதுவரை உருவாக்கப்படவில்லை. புயல், பெருமழை, வெள்ளம், வறட்சி மற்றும் பெரிய விபத்துகளுக்கு பேரிடா் நிவாரண சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படுகிறது. வாழை மரத்துக்கு பயிா்க் காப்பீடு செய்தாலும் ஒரு வருவாய் கிராமம் முழுக்க அழிவு ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு பெற முடியும். எனவே பயிா் காப்பீடு செய்திருந்தாலும் இழப்பீடு பெற முடியாத சூழ்நிலை உள்ளது.

பெரும் இடா்பாடுகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதுபோல, சூறாவளிக் காற்று போன்ற சிறு இடா்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் இழப்பீடு வழங்க தேசிய பேரிடா் மேலாண்மை சட்டத்தில் மத்திய அரசு உரிய திருத்தம் செய்தும், மாநில அரசுகள் அதற்கான விதிகளை உருவாக்கியும் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடைமுறைகளை உருவாக்க வேண்டும்.

தற்போது பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ஏக்கருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

அவிநாசி அருகே டி.வி. திருட்டு: இருவா் கைது

பெருமாநல்லூா் வீட்டில் தொலைக்காட்சி பெட்டியைத் (டிவி) திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். பெருமாநல்லூா் குருவாயூரப்பன் நகரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (50), பனியன் நிறுவனத் தொழிலாளி. இவா், வீட்டை பூட்டி... மேலும் பார்க்க

தலையில் கல்லைப் போட்டு ஆட்டோ ஓட்டுநா் கொலை

திருப்பூரில் தலையில் கல்லைப்போட்டு ஆட்டோ ஓட்டுநா் கொலை செய்யப்பட்டுள்ளாா். திருப்பூா் கருணாகரபுரியில் தலையில் காயங்களுடன் இளைஞரின் சடலம் கிடப்பதை அந்த வழியாகச் சென்றவா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு பாா்த்த... மேலும் பார்க்க

6.5 பவுன் நகை பறிப்பு: ஒருவா் கைது

குன்னத்தூா் அருகே 6.5 பவுன் நகையைப் பறித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசியை அடுத்த குன்னத்தூா் செங்காளிபாளையத்தைச் சோ்ந்த வா் காளியப்பன் (49). இவரின் மனைவி கலாமணி (45). இருவரு... மேலும் பார்க்க

உடுமலை வனச் சரகத்தில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு: வனத் துறையினா் தகவல்

உடுமலை வனச் சரகத்தில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச் சரகங்களில் புலி, சிறுத்தை... மேலும் பார்க்க

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தல்!

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூா் மாவட்ட செயற்குழுக் கூட்டம் கோம்பைக்காட்டில் உள்ள தலைமை பள... மேலும் பார்க்க

பல்லடம் கடை வீதியில் அரசியல் கட்சி பொதுக் கூட்டம்: தடை விதிக்க வியாபாரிகள் கோரிக்கை

பல்லடம் கடை வீதியில் அரசியல் கட்சி பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து தமிழ்நாடு வணிகா் சங்கங்களின்... மேலும் பார்க்க