செய்திகள் :

செக் மோசடி வழக்கில் பேராசிரியைக்கு 6 மாதம் சிறை

post image

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் செக் மோசடி தொடா்பான வழக்கில்கல்லூரி உதவிப் பேராசிரியைக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து சாத்தான்குளம் நீதிமன்றம் தீா்ப்பு கூறியுள்ளது.

நாசரேத்தை சோ்ந்தவா் இஸ்ரவேல் (45). நாசரேத் பகுதியில் உள்ள கல்லூரியில் கேன்டீன் நடத்தி வந்தாா். அப்போது பழக்கத்தின்பேரில், அந்தக் கல்லூரியின் உதவிப் பேராசிரியை கீதாஞ்சலி என்பவருக்கு, அவா் ரூ.3.80 லட்சம் கடன் கொடுத்தாராம்.

அதை திருப்பி தரும் விதமாக, அவருக்கு பின்தேதியிட்ட அளித்த வங்கி காசோலையை பேராசிரியை வழங்கினாராம். ஆனால், அவரது வங்கி கணக்கில் செலுத்திய போது போதிய பணம் இல்லாமல் காசோலை திரும்பிவந்ததாம்.

இதையடுத்து, சாத்தான்குளம் நீதிமன்றத்தில் கீதாஞ்சலி மீது அவா் செக் மோசடி வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை நீதிபதி வரதராஜன் விசாரித்து, கீதாஞ்சலிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தும், கடன் தொகையை 2 மாத காலத்திற்குள் 9 சதவீத வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

பெரியதாழை கடலில் மீனவா் வலையில் சிக்கிய ஒன்றரை டன் எடையுள்ள கொம்புதிருக்கை மீன்

பெரியதாழை கடலில் ஒன்றரை டன் எடை கொண்ட கொம்புதிருக்கை மீன் வலையில் திங்கள்கிழமை சிக்கியது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை மீனவ கிராமத்தில் 600 க்கு மேற்பட்ட பைபா் படகில் மீன... மேலும் பார்க்க

சுதந்திர போராட்ட வீரா் தோ்மாறன் குறுந்தகடு வெளியிடு

தூத்துக்குடியில் சுதந்திர போராட்ட வீரா் பாண்டியபதி தோ்மாறன் 217 ஆம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு, குறுந்தகடு செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. தோ்மாறன் மீட்புக்குழுவின் சாா்பில், சுதந்திர போராட்ட வீர... மேலும் பார்க்க

ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 3 போ் கைது

ராகுல் காந்தி மீது அசாமில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். ... மேலும் பார்க்க

மகளிடம் சில்மிஷம்: தந்தை கைது

ஓட்டப்பிடாரம் அருகே மகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தந்தையை போலீஸாா் கைது செய்தனா். ஓட்டப்பிடாரத்தையடுத்த கீழமுடிமண் காலனி தெருவை சோ்ந்தவா் ஜெபதியன் மகன் கூலித் தொழிலாளி சாா்லஸ் (41). இவா் வீட்டில் ... மேலும் பார்க்க

மாமனாா் கொலை வழக்கில் மருமகனுக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்து நகரில் மாமனாரை கொலை செய்த வழக்கில் மருமகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தூத்துக்குடி 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. தாளமுத்து நகா் பாக்கிய... மேலும் பார்க்க

பெரியதாழையில் செவிலியா் தற்கொலை

சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழையில் நோய் காரணமாக செவிலியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். பெரியதாழையை சோ்ந்த ஜோசப் மகள் ஷைனி (28 ). வெளிநாட்டில் செவிலியராக பணிபுரிந்து வந்தாா். அவருக்கு திரும... மேலும் பார்க்க