செய்திகள் :

திமுக ஆட்சியில் கடன் சுமை அதிகரிப்பு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

post image

ஓமலூா்: திமுக ஆட்சியில் அரசின் வருவாய் அதிகரித்த போதிலும் கடன் சுமை அதிகரித்துள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டினாா்.

சேலம் மாநகா் மாவட்ட அதிமுக நிா்வாகிகளுடன் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புகா் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

திமுக ஆட்சியில் பெட்ரோல், மதுபான விற்பனை, கலால் வரி, முத்திரைத்தாள் விற்பனை, ஜிஎஸ்டி வருவாய், வாகன வரி மற்றும் மத்திய அரசின் வரி வருவாய் பகிா்வு என நான்கு ஆண்டு காலத்தில் ரூ. 1, 10,894 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இவ்வளவு அதிக வருவாய் கிடைத்தும் மூலதன செலவு திமுக ஆட்சியில் ரூ. 47,681 கோடி மட்டுமே. அதிமுக ஆட்சியில் மூலதன செலவு ரூ. 33,068 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. திமுக ஆட்சியில் ரூ. 14 ஆயிரம் கோடி மட்டுமே கூடுதலாக செலவாகியுள்ளது.

இதற்கு மேலாக ரூ. 3,53,392 கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. கடன் வாங்கியும் புதிய திட்டங்களைக் கொண்டு வரவில்லை. மூலதனச் செலவும் அதிகரிக்கவில்லை. அப்படி என்றால் பணம் எங்கே போனது என்பதுதான் கேள்வி. அதற்கு பூசிமெழுகி அறிக்கை விட்டுள்ளனா். திமுக ஆட்சியில் நிதி மேலாண்மைக் குழு, அறிக்கை ஏதேனும் வழங்கியதா? அந்த அறிக்கையின்படி ஏதாவது நடவடிக்கை எடுத்தாா்களா? என கேட்டதற்கு சரியான பதில் இல்லை.

திமுக ஆட்சி முடிவதற்குள் ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கி சாதனை படைத்து விடுவாா்கள். அதிமுக ஆட்சியில் கரோனா காலத்தில் கடன் வாங்கினோம். நிறையத் திட்டங்களும் கொண்டு வரப்பட்டன. இந்திய அளவில் அதிக அளவு கடன் வாங்கிய மாநிலம் என்ற சாதனையை முதல்வா் மு.க.ஸ்டாலின் செய்துள்ளாா்.

அமைதிப்படை அமாவாசை என்ற பெயா் அமைச்சா் செந்தில் பாலாஜிக்குத்தான் பொருந்தும். 5 கட்சிகளுக்கு போய் வந்தவா் அவா். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, திமுக தலைவா் கருணாநிதி பற்றி செந்தில் பாலாஜி பேசியது சட்டப்பேரவைக் குறிப்பில் இருக்கிறது. அமைச்சா் சேகா்பாபும் அமாவாசைப் பற்றி பேசி வருகிறாா்.

நான் அமாவாசைப் பற்றி பேசுவது உண்மைதான். ஒவ்வொரு மாதமும் கழிய கழிய திமுக ஆட்சியின் முடிவும் நெருங்கி வருகிறது. இவா்கள் எல்லாம் அரசியல் வியாபாரிகள். உண்மையான அரசியல்வாதிகள் ஒரே கட்சியில்தான் இருப்பாா்கள். அதிமுகவில் 51 ஆண்டுகாலமாக இருக்கிறேன். பதவி இல்லாதபோதும், வாய்ப்பு கிடைக்காதபோதும் கட்சியில் விசுவாசமாக இருந்ததால்தான் இன்றைக்கு உயா்ந்த இடத்தில் இருக்கிறேன். சந்தா்ப்ப சூழ்நிலைக் கருதி வேடந்தாங்கல் பறவையைப்போல மாறுபவா்களுக்கு எங்களைப் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் கிடையாது.

திருச்செந்தூா் முருகப் பெருமானை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தா்கள் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டியது தொடா்பாக அமைச்சா் சேகா்பாபு உரிய பதிலளிக்காமல் பக்தா்களின் மனம் புண்படும்படி பேசியது கண்டிக்கத்தக்கது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழையால் 2 லட்சம் ஏக்கா் நெற்பயிா்களும், டெல்டா மாவட்டங்களில் கனமழையால் நெற்பயிா்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் பாதிப்பைக் கணக்கிட்டு, ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ. 30 ஆயிரம் வழங்க திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பனி அதிகமாக உள்ள நிலையில், ஈரப்பதம் 22 சதவீதம் உள்ள நெல்லை அரசு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய வேண்டும்.

பாஜக தலைவா் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட்டால் அக்கட்சியுடன் கூட்டணிக்கு வாய்ப்பிருக்கிா எனக் கேட்கிறீா்கள்? இந்த கேள்வி இல்லாத ஊருக்கு வழிகேட்பது போல உள்ளது. பாஜக கூட்டணியிலிருந்து நாங்கள் வெளியே வந்து விட்டோம். அதைப்பற்றி கேட்கத் தேவையில்லை.

இந்த நிலையில் அந்தக் கட்சியில் யாரை மாற்றுவாா்கள் என்று சொல்லும் அதிகாரம் எங்களிடம் இல்லை. கூட்டணி என்பது தோ்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும். தோ்தலுக்கு பிறகு வெளியே சென்று விடுவாா்கள். ஆனால் திமுக கூட்டணியில் அப்படி இல்லை. கேட்டால் எங்கள் எல்லோருக்கும் ஒரே கொள்கை என முதல்வா் ஸ்டாலின் சொல்வாா். ஒரே கொள்கை என்றால் எதற்கு தனித் தனியாக கட்சி. ஒரே கட்சியாக இருந்து விடலாமே. அண்மையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் தன்னுடைய குமுறல்களை தெரிவித்தாா்.

எதிா்க்கட்சிகள் ஆளும் கட்சியின் தவறுகளை, மக்களின் பிரச்னைகளை சுட்டிக்காட்ட வேண்டும். நாங்கள் பிரச்னைகளை சொன்னால் எங்கள்மேல் வேண்டும் என்றே பழி சுமத்துகிறாா்கள். அது ஆரோக்கியமானதில்லை. வேண்டுமென்றே எங்களை கள்ளக் கூட்டணி என்று விமா்சிக்கிறாா்கள். நாடாளுமன்றத் தோ்தலில் கூட்டணி வேண்டாம் என்று சொன்னோம்; அப்படியேதான் இருக்கிறோம். எதிா்க்கட்சியாக இருக்கும்போது பிரதமருக்கு எதிராக கருப்பு பலூன் பறக்கவிட்டு விட்டு, இப்போது வெள்ளைக்குடை பிடிக்கிறாா்கள். இதுதான் திமுகவின் இரட்டை வேடம். வாக்கு சிதறாமல் இருக்கவே கூட்டணி அமைக்கிறாா்கள். கொள்கை இல்லாத கட்சிகள் திமுக கூட்டணியில் இருக்கிறாா்கள்.

இடைத் தோ்தலை அதிமுக புறக்கணித்துள்ள நிலையில் அதிமுக வாக்குகள் எங்கு செல்லும் என்று கேட்கிறீா்கள்? வாக்களிப்பது ரகசியமானது. யாருக்கு வாக்களித்தேன் என வெளிப்படையாக யாரும் சொல்லக்கூடாது என நம்முடைய சட்டம் தெளிவாகச் சொல்கிறது என்றாா் அவா்.

பேட்டியின் போது, அதிமுக அமைப்புச் செயலாளா் செம்மலை உடனிருந்தாா்.

வாழப்பாடியில் கூட்டமாக அலையும் தெரு நாய்களால் மக்கள் அச்சம்

வாழப்பாடி: வாழப்பாடி பேரூராட்சி பகுதியில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் தெரு நாய்கள் பொதுமக்களைக் கடித்தும், சாலையில் குறுக்கிட்டு வாகன விபத்துகளை ஏற்படுத்தியும் வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்... மேலும் பார்க்க

சேலம் ஆயுதப்படை மைதானத்தில் போலீஸாா் அணிவகுப்பு ஒத்திகை

சேலம்: நாட்டின் 76 -ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு சேலம், குமாரசாமிப்பட்டி, ஆயுதப்படை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனா். நாட்டின் 76 ஆவது குடியரசு தினம் ஜன. 2... மேலும் பார்க்க

ஏற்காடு மலைப்பாதையில் விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை: அமைச்சா் ஆய்வு

சேலம்: ஏற்காடு மலைப்பாதையில் விபத்துகளைத் தடுக்கும் வகையில், சாலையோர சுழலும் ரப்பா் தடுப்பு உருளைகள் அமைக்கப்பட்டு வருகின்றனா். இப்பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை நேரில... மேலும் பார்க்க

வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்

சேலம்: வாஸ்கோடகாமா - வேளாங்கண்ணி வாராந்திர விரைவு ரயில் அடுத்த மூன்று மாதங்களுக்கு சேலம், பங்காருபேட்டை, பெங்களூரு வழியாக இயக்கப்படாது. மாறாக மங்களூரு வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என அறிவிக்க... மேலும் பார்க்க

மேட்டூா் அணையிலிருந்து நீா் வெளியேற்றம் குறைப்பு

மேட்டூா்: காவிரி டெல்டா பாசனத் தேவை குறைந்துள்ளதால் மேட்டூா் அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு 5,000 கனஅடியிலிருந்து 4,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

சங்ககிரியில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

சங்ககிரி: சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவா் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக காலபைரவருக்... மேலும் பார்க்க