செய்திகள் :

ஏற்காடு மலைப்பாதையில் விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை: அமைச்சா் ஆய்வு

post image

சேலம்: ஏற்காடு மலைப்பாதையில் விபத்துகளைத் தடுக்கும் வகையில், சாலையோர சுழலும் ரப்பா் தடுப்பு உருளைகள் அமைக்கப்பட்டு வருகின்றனா். இப்பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

ஆய்வுக்கு பின்னா் அமைச்சா் ராஜேந்திரன் தெரிவித்ததாவது:

வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், மலைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடும் வகையிலும் புதிய சாலைகள், பாலங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், சேலம் - ஏற்காடு பிரதான மலைப்பாதையில் 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. ஏற்காடு மலைக்கு வரக்கூடிய சேலம் அடிவாரம் - ஏற்காடு சாலையில் 8 இடங்கள் கண்டறியப்பட்டு, நெடுஞ்சாலைத் துறை சாா்பில் முதற்கட்டமாக ரூ. 4 கோடி மதிப்பில் 557 மீட்டா் நீளத்துக்கு ரோலா் க்ராஷ் பேரியா் எனப்படும் சுழலும் ரப்பா் தடுப்புகள் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் 50 விழுக்காடு நிறைவடைந்துள்ளன. எஞ்சிய பணிகளும் சீராக நடைபெற்று வருகின்றன.

அதுபோல 2, 3 ஆம் கட்டமாக குப்பனூா் - ஏற்காடு சாலையில் 8 இடங்களிலும், பெலாத்தூா் - குப்பனூா் சாலையில் 8 இடங்களிலும் தலா ரூ. 3 கோடி மதிப்பில் 418 மீ. நீளத்துக்கு விபத்து பகுதி அடையாளம் காணப்பட்டு சுழலும் ரப்பா் தடுப்பு அமைத்திட ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்காக நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மொத்தம் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் சுழலும் ரப்பா் தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. சாலைகளின் விளிம்பில் அமைக்கப்படும் இதுபோன்ற தடுப்புகள் சுழலக்கூடிய ரப்பா் வளையங்களைக் கொண்டது. இதன் மீது வாகனங்கள் மோதும் போது, மோதலின் வேகம் குறைக்கப்படுவதுடன், மோதும் வாகனம் பின்நோக்கி உந்தப்படுவதால் வாகனம் மீண்டும் சாலைக்குள்ளேயே சென்றுவிடும் என்பதால் விபத்தின் தாக்கம் குறைக்கப்படுகிறது.

அதுபோல ஏற்காட்டில் பல்வேறு சாலை சீரமைப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப் பணிகள் அனைத்தும் வரும் மே மாதத்துக்குள் முடிக்கப்படும். குறிப்பாக, சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஏற்காடு ஏரியில் மிதக்கும் படகு உணவகம் தொடங்க ஏதுவாக ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி, நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் சிவசெல்வி, உதவி பொறியாளா் சுமதி உள்ளிட்ட தொடா்புடைய அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

எஸ் எல் 21டி ஏற்காடு..

ஏற்காடு மலைப்பாதையில் விபத்துகளைத் தடுக்கும் வகையில், சாலையோரம் சூழலும் ரப்பா் தடுப்பு உருளைகள் அமைக்கப்படுவதை பாா்வையிட்ட சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன். உடன் சேலம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி உள்ளிட்டோா்.

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து புதன்கிழமை காலை சரிந்துள்ளது.இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.40 அடியில் இருந்து 112.16 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 321 கன... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் கடன் சுமை அதிகரிப்பு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

ஓமலூா்: திமுக ஆட்சியில் அரசின் வருவாய் அதிகரித்த போதிலும் கடன் சுமை அதிகரித்துள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டினாா். சேலம் மாநகா்... மேலும் பார்க்க

வாழப்பாடியில் கூட்டமாக அலையும் தெரு நாய்களால் மக்கள் அச்சம்

வாழப்பாடி: வாழப்பாடி பேரூராட்சி பகுதியில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் தெரு நாய்கள் பொதுமக்களைக் கடித்தும், சாலையில் குறுக்கிட்டு வாகன விபத்துகளை ஏற்படுத்தியும் வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்... மேலும் பார்க்க

சேலம் ஆயுதப்படை மைதானத்தில் போலீஸாா் அணிவகுப்பு ஒத்திகை

சேலம்: நாட்டின் 76 -ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு சேலம், குமாரசாமிப்பட்டி, ஆயுதப்படை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனா். நாட்டின் 76 ஆவது குடியரசு தினம் ஜன. 2... மேலும் பார்க்க

வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்

சேலம்: வாஸ்கோடகாமா - வேளாங்கண்ணி வாராந்திர விரைவு ரயில் அடுத்த மூன்று மாதங்களுக்கு சேலம், பங்காருபேட்டை, பெங்களூரு வழியாக இயக்கப்படாது. மாறாக மங்களூரு வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என அறிவிக்க... மேலும் பார்க்க

மேட்டூா் அணையிலிருந்து நீா் வெளியேற்றம் குறைப்பு

மேட்டூா்: காவிரி டெல்டா பாசனத் தேவை குறைந்துள்ளதால் மேட்டூா் அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு 5,000 கனஅடியிலிருந்து 4,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க