`விஜய் பரபரப்பு ஏற்படுத்த நினைக்கிறாரா?' - விமான நிலையம் விவகாரத்தில் வானதி சீனி...
மேட்டூா் அணையிலிருந்து நீா் வெளியேற்றம் குறைப்பு
மேட்டூா்: காவிரி டெல்டா பாசனத் தேவை குறைந்துள்ளதால் மேட்டூா் அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு 5,000 கனஅடியிலிருந்து 4,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 112.64 அடியிலிருந்து 112.40 அடியாகச் சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 189 கன அடியிலிருந்து 321 அடியாக சற்று அதிகரித்துள்ளது.
காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் பாசன தேவை குறைந்துள்ளதால் மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 5,000 கனஅடியிலிருந்து 4,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. நீா் இருப்பு 81.86 டி.எம்.சி.யாக உள்ளது.