செய்திகள் :

செங்கோட்டையனை விரைவில் சந்திப்பேன்: ஓ. பன்னீர்செல்வம்

post image

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை உறுதியாக சந்திப்பேன் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியின் பல்வேறு பொறுப்புகளிலிருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக கட்சி நிர்வாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ராஜிநாமா செய்து, கடிதத்தை கட்சியின் தலைமைக்கு அனுப்பி வருகின்றனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் “செங்கோட்டையனுக்கு முழு ஆதரவளிக்க தயாராக இருக்கிறோம். அவர் எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் எனது வாழ்த்துகள்.

10 நாள்கள் அவகாசம் நிறைவடைந்த பிறகு அவர் அழைத்து பேசுவார் என நினைக்கிறேன். அதன் பின்னர், உறுதியாக சந்திப்பேன்” என்றார்.

இதையும் படிக்க: ரொனால்டோ 2 கோல்கள்; போர்ச்சுகல் அபார வெற்றி: மறைந்த வீரருக்கு மரியாதை!

Former Chief Minister O. Panneerselvam has said that he will definitely meet former Minister Sengottaiyan.

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து விற்பனையாகி வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நில நாள்களாகவே ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் ... மேலும் பார்க்க

ஒரத்தநாடு அருகே அண்ணன் வாங்கிய கடனுக்காக தம்பி வெட்டிப் படுகொலை

ஒரத்தநாடு அருகே அண்ணன் 15 லட்சம் கடன் வாங்கி தலை மறைவானதால் வெளிநாட்டில் இருந்து வந்த தம்பி ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வாட்டாத்தி கோட்... மேலும் பார்க்க

மல்லை சத்யா மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம்

மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியான அறிக்கையில், மதிமுகவின் பொறுப்பில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியி... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 23,300 கன அடியிலிருந்து வினாடிக்கு 18,800 கன அடியாக குறைந்தது. நீர்வரத்து சரிந்ததால் காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாட... மேலும் பார்க்க

போடிமெட்டு மலைச்சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து- 11 பேர் காயம்

போடிமெட்டு மலைச்சாலையில் திங்கள்கிழமை அதிகாலை சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பலத்த காயமடைந்தனர்.தஞ்சாவூர் சாஸ்தா பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் படித்துக் கொண்டிருக்கும் 21 மாணவர்கள் விடும... மேலும் பார்க்க

ஓசூரில் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தூத்துக்குடியைப் போல ஓசூரிலும் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, வெளிநாடு பயணம் ம... மேலும் பார்க்க