காவல்நிலைய விசாரணையில் சிறுவன் பலி: 4 காவலர்களுக்கு 11 ஆண்டுகள் சிறை
செஞ்சி: தனியார் சர்க்கரை ஆலை பாய்லர் வெடித்து ஒருவர் பலி
செஞ்சி அருகே தனியார் சர்க்கரை ஆலை பாய்லர் வெடித்து ஒருவர் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செஞ்சி- திருவண்ணாமலை சாலையில் செம்மேடு கிராமத்தில் அமைந்துள்ள தனியார் சர்க்கரை ஆலையில் புதன்கிழமை காலை பணியில் இருந்த பாலப் பாடி கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் மகன் புருஷோத்தமன் (27) என்பவர் சர்க்கரை பாகு செல்லும் குழாயை சரி பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென பாய்லர் வெடித்து சிதறியது. இதில் படுகாயம் அடைந்த புருஷோத்தமன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த செஞ்சி மற்றும் நல்லான் பிள்ளை பெற்றால் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேதத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.