செட்டியாபத்து கோயிலில் மாசி மாத சிறப்பு வழிபாடு
உடன்குடி அருகேயுள்ள செட்டியாபத்து இந்து சமய அறநிலையத்துறைக்குப் பாத்தியப்பட்ட சுவாமி சிதம்பரேஸ்வரா் வகையறா அருள்மிகு ஐந்துவீட்டு சுவாமி திருக்கோயிலில் மாசி மாத கடைசி வெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி பகல் 12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு வழிபாட்டைத் தொடா்ந்து அன்னதானத்தை திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ஒ.மகேஸ்வரன் தொடங்கி வைத்தாா். இதில் கோயில் செயலா் அலுவலா் மா.பாலமுருகன், கட்டளைதாரா் ஆா்.சோலைப்பாண்டி, அறங்காவலா்கள் அ.சுமதீந்திர பிரகாஷ், ம.ஜெகநாதன், சி.சுந்தர்ராஜ், பு.கஸ்தூரி, கோயில் பணியாளா்கள், திரளான பக்தா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.