செய்திகள் :

செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா; மீண்டும் அமைச்சராகும்..! - அமைச்சரவை மாற்றங்கள் என்னென்ன?

post image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், அமைச்சரவையில் முக்கிய மாற்றத்தை கொண்டுவந்திருக்கிறது திமுக.

செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகிய அமைச்சர்கள் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருக்கிறார்கள். அந்த ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள செந்தில் பாலாஜி, தனது அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி சாட்சிகளை கலைக்கலாம், மிரட்டலாம் என நீதிமன்றத்தில் வாதிட்டது அமலாக்கத்துறை.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வேண்டுமா, ஜாமீன் வேண்டுமா? என்பதை முடிவு செய்ய 28ம் தேதி வரை கெடு விதித்திருந்தது நீதிமன்றம். இந்த நிலையில் அவரை அமைச்சரவையில் இருந்து விடுவிக்கும் முடிவை எடுத்துள்ளது திமுக அரசு.

வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் வைணவ, சைவ சமயங்களை அவமதிக்கும் விதமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தது திமுக.

பொன்முடியை அமைச்சர் பொறுப்பில் இருந்தும் நீக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் குரல்கொடுத்து வருகின்றன. ஏற்கெனவே பொன்முடிக்கு சொத்துகுவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பொன்முடி
பொன்முடி

இந்த நிலையில் கட்சிக்கு பல்வேறு தரப்பிலிருந்து அழுத்தம் கொடுகப்பட்டதால் அவரும் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

DMK அமைச்சரவையில் மாற்றங்கள்

செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரத்துறை இலாகா, போக்குவரத்து துறை அமைச்சர் சிவ சங்கருக்கு கூடுதலாக வழங்கப்படவுள்ளது.

அவரது மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துச்சாமி கூடுதலாக கவனிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.

பொன்முடி நிர்வகித்து வந்த வனத்துறை அமைச்சர் பதவி பால் வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது..

முன்னதாக அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்த பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளது. அவருக்கான இலாகா அறிவிக்கப்படவில்லை.

புதிய அமைச்சர் நாளை ஆளுநர் மாளிகையில் பதவியேற்பார் எனக் கூறப்படுகிறது.

`அகவிலைப்படி உயர்வு; திருமண முன்பணம் ரூ.5 லட்சம்’ - அரசு ஊழியர்களுக்கு வெளியான அறிவிப்புகள்

சட்டப்பேரவையில் இன்று( ஏப்ரல் 28) அரசு ஊழியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அதன்படி, “அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு 2025 ஜனவரி 1-ம் தேதியிலிருந்து வழங்க... மேலும் பார்க்க

மாஞ்சோலை : `அடுக்குமாடி வேண்டாம்; சமத்துவபுரம் வேண்டும்’ - தொழிலாளர்கள் வலியுறுத்துவது ஏன்?

மாஞ்சோலையிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள், மறுவாழ்வு திட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், மதுரை மக்கள் கண்கானிப்பக செயல் இயக்குநர் ஹென்றி ... மேலும் பார்க்க

போரை நிறுத்தாத ரஷ்யா; உக்ரைனில் தொடரும் உயிர் பலிகள்! - என்ன நடந்தது?

'இதோ முடிந்துவிடும்', 'அதோ முடிந்துவிடும்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி வந்த ரஷ்ய - உக்ரைன் போர், வெற்றிகரமான பேச்சுவார்த்தையை கூட இதுவரை எட்டவில்லை.ரஷ்யா, உக்ரைன் மீதான தனது தாக்குதலை தொடர்ந்து... மேலும் பார்க்க

தஞ்சை அரசு மருத்துவமனை தீ விபத்து: ”உயிரைப் பணயம் வச்சு காப்பாத்தினோம்; ஆனா..”- கொதிக்கும் ஊழியர்கள்

தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் கடந்த 24-ம் தேதி மகப்பேறு சிகிச்சைப் பிரிவு வார்டில் ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் வார்டு முழுவதும் புகை சூழ்ந்தது... மேலும் பார்க்க

"கரூர்- திருச்சி மாவட்டங்களை இணைக்கும் பாலம் என் கனவுத் திட்டம்" - செந்தில் பாலாஜி

கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் பணிகளைச் செந்தில் பாலாஜி நேற்று (ஏப்ரல் 27) காலை பார்வையிட்டார்.அப்போது, கரூர் - திருச்சி மாவட்டங்களை இணைக்கும் காவிரி ஆற்றைக் கடந்து செல்ல, நெரூர்- உன்ன... மேலும் பார்க்க

TVK: "சமரசத்திற்கு இடமில்லை.. எந்த எல்லைக்கும் செல்வோம்" - தவெக தலைவர் விஜய் பேசியது என்ன?

த.வெ.க மேற்கு மண்டல பூத் கமிட்டி முகவர்கள் கருத்தரங்கம் இரண்டாவது நாளாக நேற்றும் கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்றது. நேற்றைய தினம் கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.... மேலும் பார்க்க