BB Tamil 9: "காசு அள்ளி தந்தாலும் அதை எல்லாம் ஆதரித்துப் பாட மாட்டார்" - கானா வி...
செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக முடியுமா? - உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்து என்ன?
தமிழ்நாட்டின் மின்சாரத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக அவர் மீது வழக்கும் பதியப்பட்டது. 2022-ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படாதது குறித்து கடுமையான கருத்துகளைத் தெரிவித்திருந்தது.
மேலும், அவர் அமைச்சர் பதவியில் இல்லை என்றால் ஜாமீன் வழங்கப்படும் என உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கடுமையான கருத்துக்களை தீர்ப்பில் இருந்து நீக்கும்படி கோரி செந்தில் பாலாஜி தரப்பும் மனு தாக்கல் செய்திருந்தது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பு, ``செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கள் தீர்ப்பில் முழுமையாக இடம்பெறவில்லை.
ஆனால் அவர்கள் உத்தரவில் தெரிவித்துள்ள கருத்துக்கள் மீண்டும் அமைச்சராக பதவியேற்றால் சாட்சிகளை கலைக்க நேரிடும் என்றும், ஒருவேளை சாட்சிகள் கலைக்கப்பட்டால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கையாக தெரிவித்துள்ளனர்.
அதைத்தான் நீக்க வேண்டும் எனக்கோருகிறோம். மனுதாரர் சாட்சியங்களை கலைக்க முற்பட்டால் நீங்களே ஜாமீனை ரத்து செய்யலாம்' எனத் தெரிவித்திருக்கின்றனர்’’ என்றது.
அதையடுத்து நீதிபதிகள், "சாட்சிகளை கலைக்க முற்படுவதாக தெரிந்தால் எந்த நேரமும் செந்தில் பாலாஜியின் ஜாமீனை எங்களால் ரத்து செய்ய முடியும்.
அதேநேரம் அவர் அமைச்சராகக்கூடாது என உச்ச நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை. நீண்ட சிறைவாசத்தை அனுபவித்து விட்டார் என்ற காரணத்துக்காகவும், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த உத்தரவாதத்தை கருத்தில் கொண்டுமே அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
பல அமைச்சர்களுக்கான எதிரான வழக்குகளில் விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது. எத்தனைபேர் ராஜினாமா செய்துள்ளனர்.
இவர் மட்டும் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும். எனவே, வழக்கு விசாரணை முடிந்து அவர் விடுவிக்கப்படும் வரை அமைச்சராக பதவியில் தொடர விரும்பினால் அதுதொடர்பாக அனுமதி கோரி தனியாக மனு தாக்கல் செய்யுங்கள்” என்றனர்.