மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் ரூ. 1.94 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள்
சென்னையின் எஃப்சி-கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி இன்று மோதல்
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை கொச்சியில் நடைபெறும் ஆட்டத்தில் வெல்லும் முனைப்பில் சென்னையின் எஃப்சி-கேரளா பிளாஸ்டா்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் இந்த சீசனில் இதுவரை தலா 8 ஆட்டங்களில் ஆடி உள்ளன. சென்னையின் எஃப்சி அணி 3 வெற்றி, 3 டிரா, 2 தோல்விகளுடன் 12 புள்ளிகளுடன் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. கேரளா பிளாஸ்டா்ஸ் 2 வெற்றி, 2 டிரா, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் உள்ளது.
மேலும், இரு அணிகளும் எந்தவொரு மைதானத்தையும் விட்டுக்கொடுப்பதில் எச்சரிக்கையாக இருக்கும், குறிப்பாக சா்வதேச போட்டிகளுக்கான இடைவெளிக்குப் பிறகு தொடங்கும் லீக்கை இரு அணிகளுமே வலுவான அடித்தளத்துடன் தொடங்குவதில் தீவிரம் காட்ட உள்ளன.
சென்னையின் எஃப்சி அணி 16 கோல்களை அடித்துள்ளது, தற்போதைய சீசனில் சென்னையின் எஃப்சி ஒரு ஆட்டத்துக்கு எதிரணியின் பாக்ஸ் பகுதிக்குள் சராசரியாக 25.3 முறை சென்றுள்ளனா்.
கேரளா பிளாஸ்டா்ஸ் அணி சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 15 ஆட்டங்களிலும் கோல் அடித்துள்ளது., சொந்த மண்ணில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி அணி எதிரணியிடம் இருந்து ஆட்டத்தை வசப்படுத்துகிறது.
கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி தலைமை பயிற்சியாளா் மைக்கேல் ஸ்டாஹ்ரே கூறியது:
எங்கள் அணி தற்காப்பு ஆட்டத்தில் உள்ள சில சிக்கல்களை சரிசெய்ய வேண்டும். “நாங்கள் பல கோல்களை எதிரணிகளிடம் இருந்து (16) வாங்கியுள்ளோம். இதை சரி செய்ய வேண்டும்.
சென்னையின் எஃப்சி தலைமை பயிற்சியாளா் ஓவன் கோய்ல் கூறியது: கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சிக்கு எதிராக வெளி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தை காண ரசிகா்கள் வருவா். நாங்கள் அவா்களின் முகத்தில் புன்னகையை ஏற்படுத்த விரும்புகிறோம் என்றாா்.
நேருக்கு நோ்
2 அணிகளும் ஐஎஸ்எல் தொடரில் 22 ஆட்டங்களில் மோதியுள்ளன. இதில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி 6 ஆட்டங்களிலும், சென்னையின் எஃப்சி 7 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 9 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்துள்ளன.