செய்திகள் :

சென்னையில் தனியார் மினி பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதிக்ககூடாது!

post image

சென்னையில் தனியார் மினி பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது கண்டனம் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி, சென்னையில் தனியார் மினி பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதிக்ககூடாது. போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநரின் எதிர்ப்பையும் மீறி தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி அளிக்க வேண்டிய தேவை என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையின் புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மூலம் மினி பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும்,பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படவிருப்பதாகவும் தமிழக அரசு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த காலங்களில் இல்லாத வகையில் சென்னையில் தனியார் மினி பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

சென்னையில் பொதுப்போக்குவரத்து வசதியை மேம்படுத்த வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளின் எண்ணிக்கையை 8000 ஆக உயர்த்த வேண்டும்; அவற்றில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிப்பதன் மூலம் பொதுப்போக்குவத்துப் பயன்பாட்டை அதிகரித்து, சென்னையில் மகிழுந்துகளின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்; அதன் வாயிலாக போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது தான் பாமக கொள்கை ஆகும். இதை நோக்கி அரசின் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் அது வரவேற்கத்தக்கதாகும்.

ஆனால், மக்களுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதாகக் கூறி தனியார் மினி பேருந்துகளை இயக்க அனுமதிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. சென்னையில் ஏற்கனவே அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, சென்னையில் தனியார் மூலம் மாநகரப் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விழாக்காலங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க |ஆம் ஆத்மி 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும்: சஞ்சய் சிங்

இந்த நிலையில், தனியார் மினி பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதித்திருப்பதை, போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்குவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியுள்ளது.

சென்னையில் மினி பேருந்துகளை இயக்குவது தொடர்பாக மக்களின் கருத்துகளை அறிவதற்காக கடந்த ஜூலை 22-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பேசிய மாநகரப் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் மினி பேருந்துகளை இயக்க வேண்டும். 25 கிமீ வரை மினி பேருந்துகளை இயக்காமல், 6 முதல் 8 கிமீ வரை மட்டுமே இயக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்படியானால், போதிய எண்ணிக்கையில் மினி பேருந்துகளை இயக்குவதற்கான திறன் மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு இருப்பதாகத் தான் பொருள். ஆனால், போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநரின் எதிர்ப்பையும் மீறி தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி அளிக்க வேண்டிய தேவை என்ன?

எந்த ஒரு புதிய திட்டத்தையும் செயல்படுத்துவதாக இருந்தால் அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய சிறிது கால அவகாசம் தேவைப்படும். ஆனால், சென்னையில் தனியார் மினி பேருந்துகள் பிப்ரவரி மாதம் முதல் இயக்கப்படும் என்று, அந்த மாதம் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன் அரசுத் தரப்பிலிருந்து அறிவிப்பு வருகிறது என்றால், அதற்கான முன்னேற்பாடுகள் எவ்வாறு செய்யப்பட்டன, தனியார் மினி பேருந்துகளை இயக்க யார், யாருக்கெல்லாம் அனுமதி அளிக்கப் பட்டிருக்கிறது? மினி பேருந்துகளை இயக்குவதற்கான உரிமங்கள் எவ்வாறு வழங்கப்பட்டன? அதற்கான பொது அறிவிப்பு ஏதேனும் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டனவா? என்பது போன்ற வினாக்கள் எழுகின்றன. அவை அனைத்திற்கும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.

சென்னையில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மினி பேருந்துகளை இயக்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக இப்படி ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஒருவேளை சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கான உரிமங்கள் எற்கனவே வழங்கப்பட்டிருந்தால் அது சட்ட விரோதம் ஆகும். அவ்வாறு உரிமங்கள் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்திருக்கக் கூடும். அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் பாமக வழக்கு தொடரும் என அவர் கூறியுள்ளார்.

கவனமாக இருங்கள்: ராஜ்கிரண் எச்சரிக்கை பதிவு!

என் பெயரைச் சொன்னால் கவனமாக இருங்கள் என்று நடிகர் ராஜ்கிரண் பதிவிட்டுள்ளார்.தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என பன்முகம் கொண்டவர் நடிகர் ராஜ்கிரண். இவர் இட்லிக் கடை, மாமன், வா வாத்தியாரே உள்ளிட்ட படங்க... மேலும் பார்க்க

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்கள் முடக்கம்!

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான ரூ. 1.26 கோடி மதிப்பிலான சொத்துகளை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.சென்னை மண்டல அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த ந... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைப் பார்க்கலாம்.வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான விடுதலை -2 திரைப்படம் அமேசான்... மேலும் பார்க்க

1,20,000 பச்சைப் பேரோந்தி பல்லிகளை கொல்ல தைவான் அரசு திட்டம்!

தைவான் நாட்டில் சுமார் 1,20,000 பச்சைப் பேரோந்தி பல்லிகளை கொல்ல அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளை பூர்வீகமாக கொண்ட பச்சை இகுவானா என்றழைக்கப்படும் பச்சைப் பேரேந... மேலும் பார்க்க

இரும்புக் காலம்: இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து எழுதப்படுவதற்கான அச்சாணி!

5.300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இரும்பு பயன்படுத்தப்பட்டதாக முதல்வர் அறிவித்த நிலையில், இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து எழுதப்படுவதற்கான அச்சாணி என்று நிதியமைச்சர் தங்கம்... மேலும் பார்க்க

கோமியம் ஒவ்வாமையை ஏற்படுத்தும்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

கோமியத்தில் உள்ள சேர்மங்கள் மற்றும் புரதம் பலருக்கு ஒவ்வாமையை உருவாக்கும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது.பொங்கல் விழாவையொட்டி சென்னையில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய ஐஐடி இயக்குந... மேலும் பார்க்க