செய்திகள் :

சென்னை எழும்பூர் -கன்னியாகுமரி, ராமேசுவரம் விரைவு ரயில் சேவையில் மாற்றம்!

post image

விழுப்புரம் மாவட்டத்தில் புயல் காரணமாக நேற்று பெய்த கனமழையால் ரயில்வே பாதைகளில் பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் விழுப்புரம் - திண்டிவனம் இடையே மற்றும் விக்கிரவாண்டி - திண்டிவனம் ஆகிய இடங்களில் ரயில் பாதைகளில் சேதம் ஏற்பட்டது. இதனால் இன்று அதிகாலை தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த ரயில்கள் விழுப்புரத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் ரயில் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

வழித்தடம் மாற்றம்:

சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் அதிவிரைவு ரயில்(22661) எழும்பூரில் இருந்து இன்று மாலை 5.45 மணிக்குப் பதிலாக 6.45 மணிக்குப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ரயில், விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் - விழுப்புரம் வரை இந்த ரயில் சேவை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி அதி விரைவு ரயில் (12633) எழும்பூரில் இருந்து இன்று மாலை 5.20 மணிக்குப் பதிலாக 6.20 மணிக்குப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ரயில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்படும்.

திருவண்ணாமலையில் மண் சரிவு: நெஞ்சைப் பதற வைக்கிறது -விஜய் இரங்கல்!

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். ஃபென்ஜால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை: மண் சரிவில் சிக்கிய 7 பேரின் உடல்களும் மீட்பு!

ஃபென்ஜால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை பெய்ததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றும் மலைஅடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகா், 11-ஆவது தெருவில் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் துணை முதல்வர் நேரில் ஆய்வு!

ஃபென்ஜால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை பெய்ததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.இதனிடையே, திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றும் மலைஅடிவாரத்தில... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட முதல்வர்!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை பார்வையிட்டு, பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.வங்கக்கடலில் உருவாகி... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரித் தேர்வுகள் ஒத்திவைப்பு!

ஃபென்ஜால் புயலால் பெய்துள்ள கனமழையால் விழுப்புரம், திண்டிவனம், கடலூர் உள்ளிட்ட வட தமிழகத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.இந்த நிலையில், நாளை(டிச. 3) நடைபெறவிருந்த பாலிடெக்னிக் கல்லூரி தேர்... மேலும் பார்க்க

சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் 8 மணி நேரத்திற்குப்பின் போக்குவரத்து சீரானது!

ஃபென்ஜால் புயலால் பெய்துள்ள கனமழையால் விழுப்புரம், திண்டிவனம், கடலூர் உள்ளிட்ட வட தமிழகத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.இந்த நிலையில், சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் 8 மணி நேரத்திற்குப்பி... மேலும் பார்க்க