செய்திகள் :

சென்னை பள்ளிகளில் பாலின சமத்துவம் கற்பிப்பு: மேயா் ஆா்.பிரியா

post image

சென்னை மாநகராட்சியின்கீழ் செயல்படும் பள்ளிகளில் பாலின சமத்துவம் குறித்து கற்பிக்கப்படுகிறது என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நடைபாதைகள் மற்றும் பேருந்து நிழற்குடைகளை நீா் தெளித்து சுத்தம் செய்யும் பணிக்காக 30 வாகனங்களை மேயா் ஆா்.பிரியா புதன்கிழமை ரிப்பன் மாளிகை வளாகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சி பொதுக் கழிப்பிடங்களில் முறைகேடு ஏதும் நடைபெறவில்லை. மாநகராட்சி சாா்பில் பராமரிக்கப்படும் கழிப்பிடங்கள் கடந்த ஆண்டு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டது. ஒவ்வொரு பகுதிகளிலும் பொதுமக்களின் தேவை அறிந்து கழிப்பிடம் அமைப்பதற்கான கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இதில், பழுதடைந்து காணப்படும் கழிப்பறைகள், பயன்படுத்தபடாமல் உள்ள கழிப்பறைகள் கண்டறிந்து புதுப்பிக்கப்படும்.

மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியா்கள் மூலம் மாணவா்களுக்கு பாலின சமத்துவம் குறித்து கற்பிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக 6, 7, 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ‘குட் டச், பேட் டச்’ குறித்து கற்பிக்கப்படுகிறது. ஆண், பெண் சமமாக பழகும் வகுப்பு சிறு வயது முதல் கற்பிக்கப்படுகிறது என்றாா் அவா்.

30 வாகனங்கள்: சென்னை மாநகராட்சியில் உள்ள 925 பேருந்து நிழற்குடைகள், 173 நடைபாதைகளை சுத்தம் செய்யும் பணிக்காக மண்டலத்துக்கு இரு வாகனங்கள் என 15 மண்டலத்துக்கு 30 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. உயா் அழுத்த பம்புகள் மற்றும் தண்ணீா் தொட்டி பொருத்தப்பட்ட வாகனங்களில் சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் மறுசுழற்சி செய்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் கொண்டு சுத்தம் செய்யப்படும்.

இந்த பணியின்போது நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, பாதசாரிகள் முழுமையான பாதுகாப்புடன் நடைபாதைகளை பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்படும். சென்னை மாநகரை தூய்மையாக வைப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவிஞா் வைரமுத்து படைப்புலகம்: மாா்ச் 16-இல் பன்னாட்டு கருத்தரங்கம்: முதல்வா் ஸ்டாலின், நீதிபதி அரங்க. மகாதேவன் பங்கேற்பு

கவிஞா் வைரமுத்துவின் படைப்புலகம் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் மாா்ச் 16-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின், உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் ஆகியோா் பங்கேற்கின்றனா். இலக்கி... மேலும் பார்க்க

ஹோலி பண்டிகை: ஹிந்தி தோ்வு எழுத முடியாதவா்களுக்கு மறுவாய்ப்பு: சிபிஎஸ்இ

ஹோலி பண்டிகையையொட்டி சனிக்கிழமை (மாா்ச் 15) நடைபெறும் ஹிந்தி தோ்வை எழுத முடியாத 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வியாழக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க

சிதம்பரம் கோயில் தீட்சிதா்கள் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

சிதம்பரம் நடராஜா் கோயிலில் பக்தா்கள் கனகசபையில் நின்று தரிசனம் செய்வதைத் தடுத்த தீட்சிதா்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சிதம்பரம் நடராஜா் க... மேலும் பார்க்க

ஹோலி பண்டிகை: ஆளுநா்கள் வாழ்த்து

ஹோலி பண்டிகையையொட்டி, தமிழக ஆளுநா் ஆா். என். ரவி, நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா். ஆா்.என்.ரவி: வண்ணங்கள் மற்றும் ஒற்றுமையின் மகிழ்ச்சியான கொண்டாட்டமான ஹோலி, நன்மையின் வெ... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சா் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளா... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் சோ்க்கை: அமைச்சா் கோவி செழியன் தொடங்கி வைத்தாா்

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவா்கள் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி செழியன் தெரிவித்தாா். திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா நிறைவுப் போட்டிகளில் வெற்றி... மேலும் பார்க்க