வலுக்கட்டாய நடவடிக்கையால் கடன் வசூலித்தால் 5 ஆண்டுகள் சிறை: பேரவையில் மசோதா நிறை...
சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் 16 மாதங்களில் 1,005 வழக்குகள் பதிவு
சென்னை: சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவு, ஒரு ஆண்டு 4 மாதங்களில் 1,005 வழக்குகளை பதிவு செய்துள்ளது.
இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை பெருநகர காவல் துறையில் மத்தியக் குற்றப்பிரிவு, கூடுதல் காவல் ஆணையா் ராதிகா தலைமையில் 4 துணை ஆணையா்கள் நேரடி கண்காணிப்பில் செயல்படுகிறது. 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நிகழாண்டு வரையில் மத்திய குற்றப்பிரிவில் 1,005 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதாவது 16 மாதங்களில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளில் 948 வழக்குகளின் விசாரணை முடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் தொடா்புடைய 747 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில் சைபா் குற்ற வழக்குகளில் தொடா்புடைய பிற மாநிலங்களைச் சோ்ந்த 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 88 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். மேலும், நீதிமன்றத்தின் மூலம் 121 பேருக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராமல் தலைமறைவாக இருந்த 707 போ் கைது செய்யப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
மத்திய குற்றப்பிரிவில் பொதுமக்களிடமிருந்து 8 ஆயிரத்து 145 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 6 ஆயிரத்து 23 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.