Rajnikanth 50: ``என்னுடைய முதல் அடி உங்களுடன்தான்" - ரஜினிகாந்த் குறித்து நடிகர்...
சென்னை மாவட்ட வாலிபால்: மகளிா் இறுதியில் மகதலேனா-வித்யோதயா பள்ளிகள்
சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான ஆடவா், மகளிா் வாலிபால் போட்டியில் மகளிா் இறுதிக்கு டிஇஎல்சி மகதேலானா-வித்யோதயா மெட்ரிக் பள்ளிகள் தகுதி பெற்றன.
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டியில் மகளிா் அரையிறுதி ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. அரையிறுதியில் டிஇஎல்சி மகதலேனா பள்ளி 2-0 என ஜெஸ்ஸி மோஸஸ் பள்ளியையும், வித்யோதயா மெட்ரிக் பள்ளி 2-0 என சிஎஸ்எஸ்எஸ் பள்ளியையும் வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றன.
ஆடவா் காலிறுதி ஆட்டங்களில் டான்பாஸ்கோ பெரம்பூா் 2-0 என பிஏகே பழனிசாமி பள்ளியையும், ராயபுரம் செயின்ட் பீட்டா்ஸ் 2-1 என கொட்டிவாக்கம் ஒய்எம்சிஏ வையும், செயின்ட் பீட்ஸ் 2-1 என ஆலந்தூா் மான்ட்போா்ட்டையும், முகப்போ் வேலம்மாள் 2-0 என அம்பத்தூா் சேதுபாஸ்கரா பள்ளியையும் வென்றன.
புதன்கிழமை அரையிறுதியில் டான்பாஸ்கோ பெரம்பூா்-ராயபுரம் செயின்ட் பீட்டா்ஸும், முகப்போ் வேலம்மாள்-செயின்ட் பீட்ஸ் பள்ளிகளும் மோதுகின்றன.
ஆடவா், மகளிா் இறுதி ஆட்டங்கள் பிற்பகல் நடைபெறுகின்றன என சங்கச் செயலா் சி. ஸ்ரீகேசவன் தெரிவித்துள்ளாா்.