சென்னை மெரினா கடற்கரையில் குளிக்கத் தடை!
காணும் பொங்கலை முன்னிட்டு மக்கள் கூட்டம் குவியும் என்பதால் சென்னை மெரினா கடற்கரையில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொங்கல், தொடர் விடுமுறை காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் கூட்டம் குவிந்து வருகின்றனர். கடற்கரைக்கு வருவோர் கடலில் இறங்காமல் தடுக்க கட்டைகள் அமைக்கப்பட்டுப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரை D-6 காவல் நிலையம் உள்பட்ட மெரினா கடற்கரை பகுதியில் காணப் பொங்கலுக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு சென்னை பெருநகர காவல்துறை சார்பாக 127 சிறப்புக் கழிவறைகள், 6 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யக் குடிநீர் 2000 லிட்டர் 6 இடங்களில் வாட்டர் டேங்க் வைக்கப்பட்டுள்ளது, காணும் பொங்கலுக்கு வருகை தரும் பொதுமக்களின் குழந்தைகளுக்கு மெரினா கடற்கரை காவல்துறையினர், ஒரு வயது முதல் 8 வயது வரை குழந்தைகளுக்குக் காணாமல் போவதைத் தடுக்கும் கையில் சென்னை பெருநகர காவல் துறையின் சார்பாக குழந்தைகளின் கைப்பட்டை இடது கையில் போலீசார் கட்டி வழி அனுப்பி வருகின்றனர்.
அதிகளவில் பொதுமக்கள் கூடக் கூடிய கடல் பகுதிகளில் நெருங்காமல் தடுக்க கண்காணிப்பு உயர் கோபுரங்கள் கடற்கரைப் பகுதியில் 12 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.