சென்னை விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: தீவிர சோதனை!
சென்னை : சென்னை விமான நிலையத்திற்கு 237 பயணிகளுடன் இன்று (பிப். 4) அதிகாலை வந்து கொண்டிருந்த சர்வதேச விமானம் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதும், தீவிர சோதனை நடத்தப்பட்டதில், விமானத்தில் வெடிபொருள்கள் எதுவுமில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளின் உடமைகள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விமானம் குறித்த கூடுதல் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.