தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்: நேற்று தில்லி நீதிமன்றம்; இன்று தாஜ் ஹோட்டல்!
செப். 27-ல் பிரதமர் மோடி ஒடிசா பயணம்!
பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 27 ஆம் தேதி ஒடிசாவின் பெரஹம்பூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்ற உள்ளதாக மாநில வருவாய் அமைச்சர் சுரேஷ் புஜாரி தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் வருகைக்கான இறுதித்திட்டம் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை என்றாலும், அவரது வருகைக்காக அனைத்தும் ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது.
பாஜக மாநிலத்தில் ஆட்சிக்கு வந்து, 15 மாதங்களில் மோடி ஒடிசாவிற்கு வருகை தருவது ஆறாவது முறையாகும். செப்டம்பர் 27 ஆம் தேதி ஒடிசாவிற்கு வருகை தரப் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும் பிரதமர் மோடி பாஜகவின் சேவா பக்ஷயா நிகழ்ச்சியில் மோடி கலந்துகொள்வார், அவர் கடைசியாக ஜூன் 20 அன்று ஒடிசாவில் பாஜக அரசின் முதலாமாண்டு விழாவில் கலந்துகொள்ள மாநிலத்திற்கு வருகை தந்தார்.
செப்டம்பர் 27 ஆம் தேதிக்கான பயணத்திட்டத்தை இறுதி செய்யும் தற்காலிக திட்டத்தைப் பிரதமர் அலுவலகத்திற்கு மாநில அரசு அனுப்பியுள்ளது.
பிரதமரின் 75வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், செப்டம்பர் 17ஆம் தேதி 75 லட்சம் மரக்கன்றுகளை நட பாஜகவும் மாநில அரசும் திட்டமிட்டுள்ளது.
'சேவா பக்ஷயா நிகழ்ச்சியின்போது, மாநில பாஜக தொழிலாளர்கள் ரத்த தான முகாம்கள், சுகாதார பரிசோதனைகள், சுகாதார இயக்கங்கள் மற்றும் சமூக உதவித் திட்டங்களை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளனர் என்று அமைச்சர் கூறினார்.