செய்திகள் :

செமிகண்டக்டர் உற்பத்தி அலகுகளை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும்: கனிமொழி எம்.பி. கோரிக்கை

post image

நமது நிருபர்

செமிகண்டக்டர் உற்பத்தி அலகுகளை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என்று மக்களவையில் நாடாளுமன்றத் திமுக குழுத் தலைவரும் தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி வலியுறுத்தினார்.

இது தொடர்பாக மக்களவையில் விதி எண் 377-இன் கீழ் அவர் புதன்கிழமை முன்வைத்த கோரிக்கை:

உலக அளவில் செமிகண்டக்டர் சிப்ஸ் இறக்குமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த இறக்குமதி 92 சதவீதமாக அதிகரித்துள்ளது. சமீபத்தில் மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 3 செமிகண்டக்டர் உற்பத்தி அலகுகளில் ஒன்று கூட இத்துறையில் ஆற்றல் மிக்க தென் மாநிலங்களுக்கு வழங்கப்படவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது.

2023-24 காலகட்டத்தில் இந்தியாவின் மின்னணு சாதன மொத்த ஏற்றுமதியில், 40 சதவீதம் தமிழ்நாட்டின் பங்களிப்பாக இருக்கிறது. இதில் உலகத்தரம் வாய்ந்த செமிகண்டக்டர் வடிவமைப்பு நிறுவனங்கள், மின்னணு சாதன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாட்டில் 100க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் விஎல்எஸ்ஐ மற்றும் நானோ தொழில்நுட்பத்தில் சிறப்புப்படிப்புகளை வழங்கி வருகின்றன.

தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுதோறும், 1.13 லட்சம் இளைஞர்கள் டிப்ளமோ மற்றும் பாலிடெக்னிக் நிறுவனங்களில் பட்டம் பெறுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 494 ஐடிஐ-கள் செமிகண்டக்டர் தொழிலுக்குத் தேவையான வகையில் 700 படிப்புகளை வழங்குகின்றன.

தமிழ்நாட்டின் மேம்பட்ட தொழில் சூழல், திறன்மிக்க தொழிலாளர்கள் இந்தியாவின் செமிகண்டக்டர் துறையில் இலக்குகளை விரைந்து எட்டுவதற்கு தனித்துவமான பங்கை வழங்கி வருகின்றன. ஆகவே, செமிகண்டக்டர் உற்பத்தி அலகுகளை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என்றார் கனிமொழி.

ஜம்மு - காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

ஜம்மு - காஷ்மிரில் பாதுகாப்புப் படை வீரர்கள் வியாழக்கிழம நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.தெற்கு காஷ்மீர், குல்காம் மாவட்டத்தில் உள்ள பெஹிபாக் பகுதியில் பயங்கரவாதி... மேலும் பார்க்க

கடன் ரூ. 6,203; வசூலித்தது ரூ. 14,131 கோடி!! நிவாரணம் கோருவேன்: விஜய் மல்லையா

வங்கியில் பெறப்பட்ட கடன் வட்டியுடன் சேர்த்து ரூ. 6,203 கோடி என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், என்னுடைய சொத்துகளை விற்று ரூ. 14,131 கோடி வசூலித்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டு... மேலும் பார்க்க

அமித் ஷாவின் பேச்சை திரித்துப் பேசும் காங்கிரஸ் தலைவர்கள்: எல். முருகன் கண்டனம்

நமது சிறப்பு நிருபர்அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் பேசியதை காங்கிரஸ் தலைவர்கள் திரித்து கூறுவதாக நாடாளுமன்ற விவகாரங்கள், தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல். முருகன் க... மேலும் பார்க்க

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: 9 பேருக்கு உச்சநீதிமன்றம் பிடியாணை

நமது நிருபர்மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 9 பேரை கைது செய்து ஆஜர்படுத்தக் கோரி பிடியாணை பிறப்பித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு கு... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஜனநாயக சக்திகள் எதிர்க்க வேண்டும்: துரை வைகோ வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபர்"ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்று மதிமுக முதன்மைச் செயலரும் அக்கட்சியின் திருச்சி தொகுதி மக்களவை உறுப்பினருமான துரை வை... மேலும் பார்க்க

"ஒரே நாடு ஒரே தேர்தல்': கூட்டுக் குழு அமைப்பு; மக்களவையில் இன்று தீர்மானம்

"ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாக்களை ஆய்வு செய்ய 31 எம்.பிக்கள் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான தீர்மானம் மக்களவையில் வியாழக்கிழமை (டிச. 19) கொண்டு வரப்படுகிறது.மக்களவை, ... மேலும் பார்க்க