செய்திகள் :

செய்யறிவுத் துறைக்குள் நுழைவது எப்படி? ரூ.3.36 கோடி சம்பளத்தை மறுத்த இளைஞர் பதில்!

post image

செய்யறிவுத் துறைக்குள் நுழைவது எப்படி என்பது குறித்து ரூ.3.36 கோடி சம்பளத்தை மறுத்த இளைஞர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

மெட்டா நிறுவனத்தில் மெஷின் லேர்னிங் பொறியாளராகப் பணியாற்றும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க இளைஞர் மனோஜ் துமு. இவர் செய்யறிவுத் துறைக்குள் நுழைய விரும்பும் இளைஞர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்.

தன்னுடைய தொழில் வாழ்க்கைப் பயணம் குறித்து விவரித்து, செய்யறிவுத் துறைக்குள் நுழைய விரும்பும் இளைஞர்களுக்கும், வேலைத் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கும் அவர் அனுபவப்பூர்வமான அறிவுரையை வழங்கியிருக்கிறார்.

இவர் தற்போது மெட்டாவின் விளம்பர ஆராய்ச்சிக் குழுவில் பணியாற்றி வருகிறார், அமேசானில் ஆண்டுக்கு ரூ.3.36 கோடி சம்பளத்தில் வந்த வேலையை உதறிவிட்டு மெட்டா நிறுவனத்தில் சேர்ந்துள்ளார்.

நேர்காணல் போட்டிகளுக்கு இடையே, தன்னுடைய வாழ்க்கைப் பாதையை எவ்வாறு தான் வடிவமைத்துக் கொண்டேன் என்பது குறித்து அவர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ஆங்கில ஊடகத்தில் அந்த கட்டுரை வெளியாகியிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளில் மெஷின் லேர்னிங் வேகமாக மாறி வருகிறது. சாட்ஜிபிடி போன்ற புதிய வரவுகளால், மெஷின் லேர்னிங் பொறியாளர், அப்ளைடு சயின்ஸ், ஆராய்ச்சி அறிவியளலார் போன்ற புதிய துறைகளும் வளர்க்கிறது.

தற்போது, மெட்டா நிறுவனத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் தான் பணியாற்றுவதாகவும், செய்யறிவு துறையில், மெட்டா நிறுவனம் எப்போதும் முன்னணியில் இருப்பதை உறுதி செய்வதே தன்னுடைய பணி என்றும் கூறியுள்ளார்.

தனிப்பட்ட புராஜெக்டுகளை விடவும், தொழில் அனுபவம்தான் முக்கியம். கல்லூரிகளிலேயே இன்டர்ன்ஷிப்புகளுக்கு மாணவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், புராஜெக்டுகள் முக்கியம்தான், ஆனால், அது இன்டர்ன்ஷிப்புக்கு அடுத்த இடத்தில்தான் இருக்கும். ஒரே நேரத்தில் அமேசான் மற்றும் மெட்டாவில் விண்ணப்பித்தபோது, புராஜெக்டுகளை முற்றிலும் நீக்கிவிட்டு, பணி அனுபவங்களை மட்டுமே ரெஸ்யூமேவில் பதிவிட்டேன்.

எந்த விளம்பரத்தையும் பார்த்து விண்ணப்பிக்காமல், நேரடியாக கம்பெனியின் இணையதளத்தில் இருந்த முகவரிக்கு லிங்க்டுஇன் மூலம் எனது மிகச் சிறப்பான ரெஸ்யூமேவை அனுப்பியிருந்தேன்.

அதுபோல, நேர்காணலுக்கும், நிறுவனத்தின் அடிப்படை முதல் அனைத்து விவரங்களையும் அறிந்துகொண்டுதான் செல்ல வேண்டும். மெட்டா நிறுவனத்தில் நேர்காணல் மட்டுமல்லாமல் சுமார் 6 மணி நேரத்துக்கும் மேல், கோடிங், மெஷின் லேர்னிங், பல்வேறு கேள்விகளும் கேட்கப்பட்டது.

கல்லூரியில் படிக்கும்போது, இன்டர்ன்ஷிப்பை தான் தவறவிட்டுவிட்டதாகவும், பிறகு அதன் முக்கியத்துவம் தெரிந்து, படிப்பு முடிந்ததும், ஒப்பந்தப் பணி ஒன்றில் சேர்ந்து பணியாற்றியதாகவும் கூறுகிறார்.

மெஷின் லேர்னிங் மற்றும் பழமையான மென்பொருள் பொறியாளர் பணியில், எப்போதும் இளைஞர்கள் குறைந்த ஊதியத்தில் கிடைக்கும் வேலைக்குச் செல்லுங்கள். அங்குதான், உங்கள் விருப்பத்தை அறிந்து வேலை செய்ய முடியும். நல்ல வாய்ப்புகள் வரும் அதனை தவறவிட்டுவிடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகரில்.. ஸ்பைஸ் ஜெட் விமானம் அவசர தரையிறக்கம்!

ஜம்மு - காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில், தில்லியில் இருந்து சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி, இன்று (ஆக.29) 4 குழந்தைகள் ம... மேலும் பார்க்க

உ.பி.யில் இருசக்கர வாகனத்தில் இருந்து பணத்தை தூக்கிச்சென்ற குரங்கு !

நிலப் பத்திரப் பதிவுக்காக இருசக்கர வாகத்தில் விவசாயி வைத்துச்சென்ற பண பையை குரங்கு எடுத்துச்சென்றதால் பரபரப்பு நிலவியது. உத்தரப் பிரதேச மாநிலம், டோண்டாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரோஹிதாஷ் சந்த... மேலும் பார்க்க

பஞ்சாப் வெள்ளம்: நிவாரண நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை வழங்கும் காங். எம்எல்ஏக்கள்!

பஞ்சாப் மாநிலத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக, அம்மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் தங்களது ஒரு மாத சம்பளத்தை வழங்குவதாக அறிவித்துள்ளனர். பஞ்ச... மேலும் பார்க்க

பானிபூரி விற்ற முன்னாள் ஐடி ஊழியர்.. கர்ப்பிணி மனைவி தற்கொலையில் மர்மம்!

கர்நாடகத்தில் பானிபூரி விற்பனையாளரின் வரதட்சணை கொடுமையால் 27 வயது கர்ப்பிணிப் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சுத்தகுண்டேபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பி... மேலும் பார்க்க

காயத்ரி மந்திரம் பாடி மோடியை வரவேற்ற ஜப்பானியர்கள்!

டோக்கியோ சென்ற பிரதமர் நரேந்திர மோடியை காயத்ரி மந்திரம் பாடி ஜப்பானிய பெண்கள் வரவேற்றனர்.15-ஆவது இந்தியா - ஜப்பான் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை காலை... மேலும் பார்க்க

மகராஷ்டிரத்தில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை!

மகாராஷ்டிரத்தின் லத்தூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மராத்வாடா மாவட்டத்தில் உள்ள 60 வருவாய் வட்டங்களில் ஆறுகள் மற்றும் ஓடைகளில்... மேலும் பார்க்க