விடுப்பில் வந்து தலைமறைவான புழல் கைதி 6 மாதத்துக்கு பிறகு சூலூரில் கைது!
சேகர் கமூலாவை வியப்பில் ஆழ்த்திய தனுஷ்!
நடிகர் தனுஷ் குறித்து இயக்குநர் சேகர் கமூலா பேசியுள்ளார்.
நடிகர் தனுஷின் 51-வது படத்தை சேகர் கமூலா இயக்கி வருகிறார். இதில் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்திலும் நாயகியாக ராஷ்மிகாவும் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
பான் இந்தியப் படமாக உருவாகும் இப்படத்திற்குக் குபேரா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு திருப்பதி, தாய்லாந்து, மும்பை பகுதிகளில் நடைபெற்று முடிந்தன. தற்போது, ஹைதராபாத்தில், தனுஷின் சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க: ‘ஏழு கடல் ஏழு மலை’ அறத்தையும் ஆத்திரத்தையும் பேசும்: மாரி செல்வராஜ்
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய இயக்குநர் சேகர் கமூலா, “குபேரா படத்தின் கதையை எழுதி முடித்ததும் இதற்கு சரியான நடிகராக தனுஷ் இருப்பார் என நினைத்து முதலில் அவரை அணுக திட்டமிட்டேன். ஆனால், இதற்கு முன் இருவருக்கும் எந்த பழக்கமும் தொடர்பும் இல்லாததால் எனக்கு தயக்கம் இருந்தது.
பின், செல்போன் வழியாகத் தொடர்புகொண்டு என்னை அறிமுகப்படுத்தியதும், தனுஷ் என் முந்தைய படங்கள் குறித்து பேச ஆரம்பித்துவிட்டார். உண்மையில், அது எனக்கு பெரிய வியப்பாக இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் உருவாகும் குபேரா திரைப்படத்தை ஜூன் வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.