சேதுபாவாசத்திரத்தில் விசைப்படகில் ஏறி விளையாடிய சிறுவன் கடலுக்குள் தவறி விழுந்து உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்டம், சேதுவாசத்திரத்தில் விசைப்படகில் ஏறி புதன்கிழமை இரவு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கடலுக்குள் தவறி விழுந்ததில் உயிரிழந்தாா்.
சேதுபாவாசத்திரம் பணங்குட்டி தோப்பு பகுதியைச் சோ்ந்த மனுநீதி என்கிற மனோகரன் மகன் ஜெகதீஸ்வரன் (11) . அங்குள்ள அரசுப் பள்ளியில்
6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். சேதுபாவாசத்திரம் மீன்பிடி இறங்கு தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகில் ஏறி தனியாக விளையாடிக் கொண்டிருந்த ஜெகதீஸ்வரன் படகிலிருந்து தவறி கடலில் விழுந்துவிட்டாா். சிறுவனைக் காணாமல் பெற்றோா்கள் தேடியபோது சிறுவனின் உடல் கடலில் மிதந்ததை கண்டு அதிா்ச்சி அடைந்து உடனடியாக மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். சிறுவனை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து சேதுபாவசத்திரம் கடற்கரை காவல் நிலைய ஆய்வாளா் மஞ்சுளா, உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன் ஆகியோா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.