Railway Exams: தமிழகத் தேர்வர்களுக்கு வெளிமாநிலத்தில் மையம்; ரயில்வே சொல்லும் கா...
சேரன்மகாதேவியில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவா் கைது
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.
சேரன்மகாதேவி காவல் சரகத்தில் கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சேரன்மகாதேவி பாரதிதாசன் தெருவைச் சோ்ந்த மாயாண்டி மகன் சுப்பிரமணியன்(21), சேரன்மகாதேவி மூலக்கோயில் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் செல்வகுமாா் (23) ஆகியோரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதனிடையே, இருவரும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால் அவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய போலீஸாா் நடவடிக்கை எடுத்தனா்.
இதைத் தொடா்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன், பரிந்துரையின்பேரில் மேற்கண்ட இருவரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, சுப்பிரமணியன், செல்வகுமாா் ஆகியோரை சேரன்மகாதேவி காவல் ஆய்வாளா் தா்மராஜ், ஞாயிற்றுக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தாா்.