சேலத்திலிருந்து பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்கள்!
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி செட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ குழந்தை வேலாயுத சுவாமி பாதயாத்திரை குழு சார்பில் 11-வது ஆண்டாக பழனிக்கு செவ்வாய்க்கிழமை பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.
அரசிராமணி செட்டிப்பட்டி பகுதியிலிருந்து பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் ஒவ்வொரு வருடமும் பழனிக்கு பாதயாத்திரை சென்று வருவர்.
அதனையடுத்து நிகழாண்டு 11வது ஆண்டாக ஜனவரி 1 ஆம் தேதி அரசிராமணி செட்டிப்பட்டியில் உள்ள பழனியாண்டவர் கோயிலில் பழனி முருகனுக்கு மாலை அணிந்து விரதமிருந்து வருகின்றனர்.
அதனையடுத்து தை முதல் நாளான ஜன.14 ஆம் தேதி பழனிக்கு பாதயாத்திரையாக செல்பவர்கள் செட்டிப்பட்டியில் உள்ள பழனியாண்டவர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து விபூதி, எலுமிச்சம் பழம், வில்வ இலை, தேங்காய்கள் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு இருமுடி கட்டினர்.
இதனையடுத்து மினி டெம்போ வாகனத்தில் அருள்மிகு முருகன் உற்சமூர்த்தி சுவாமியை அலங்கரித்து வைத்து சிறப்பு பூஜைகள் செய்து செட்டிப்பட்டி பகுதியில் இருந்து பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை பயணத்தை தொடங்கினர்.
ஜனவரி 14 ஆம் தேதி தை 1 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை புறப்பபடும் குழுவினர் ஜன.18 ஆம் தேதி தை 5ஆம் நாள் பழனி அடிவராத்தில் உள்ள கந்தன் கோயிலில் இருமுடியை செலுத்தி தரிசனம் செய்து பின்னர் பழனிமலைக்கு சென்று முருகனை வணங்கி தரிசினம் செய்த பின்னர் வீடு திரும்ப உள்ளனர்.
இருமுடியில் கொண்டு செல்லும் விபூதிகளை பழனி மலையடிவாரத்தில் உள்ள கந்தன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் மீண்டும் அக்கோயிலின் விபூதியுடன் கலந்து எடுத்து வந்து ஊரில் உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு பழனிமலை முருகனை வேண்டி கொடுப்போம் என்றனர்.