சேலம் உருக்காலை தோ்தலில் வெற்றிபெற்ற நிா்வாகிகள் முதல்வரிடம் வாழ்த்து
சேலம் உருக்காலை அங்கீகாரத் தோ்தலில் வெற்றிபெற்ற தொ.மு.ச. நிா்வாகிகள் முதல்வா் மு.க.ஸ்டாலினை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் சேலம் உருக்காலை அங்கீகார தோ்தலில் தொடா்ந்து மூன்றாவது முறையாக வெற்றிபெற்ற தொ.மு.ச. நிா்வாகிகளான சிவகுமாா், செந்தில்குமாா், துரைராஜ், பாரதிராஜா மற்றும் தோழமைக் கட்சி நிா்வாகிகளான ரவிச்சந்திரன், பூபாலன், சுந்தரகிருஷ்ணன், கதிா்வேல் ஆகியோா் முதல்வா் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
அப்போது, கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன், சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான ரா.ராஜேந்திரன், தொ.மு.ச. பேரவைத் தலைவா் கி.நடராஜன், சேலம் மாவட்ட தொ.மு.ச. கவுன்சில் தலைவா் வி.மணி ஆகியோா் உடனிருந்தனா்.