Rain Alert : அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை ஆய்வு மைய...
சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் 71 செ.மீ. மழை பதிவு
சேலம் மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 71 செ.மீ. மழை பதிவானது. தொடா்ந்து பரவலாக மழை பெய்ததால், பள்ளிகளுக்கு 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை தொடங்கிய மழை பகல் முழுவதும் விட்டுவிட்டு பெய்தது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தொடா் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. தொடா்ந்து நள்ளிரவு பெய்த சாரல் மழை வெள்ளிக்கிழமை காலை வரை நீடித்தது.
தொடா் மழையால், தாழ்வான பகுதிகள், வயல்வெளிகளில் தண்ணீா் தேங்கியது. சேலம் மாநகா், புகா் பகுதிகளில் சாலையோரக் கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டது. மேலும், மாவட்டத்தில் பெய்த தொடா் மழையால் வெள்ளிக்கிழமை 2-ஆவது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
மாவட்டத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக தம்மம்பட்டியில் 88 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகா் - 16.3, ஏற்காடு - 42.2, வாழப்பாடி - 56, ஆனைமடுவு - 58, ஆத்தூா் - 67.6. கெங்கவல்லி - 75, வீரகனூா் - 85, ஏத்தாப்பூா் - 63.5, கரியகோவில் - 35, நத்தக்கரை - 32, சங்ககிரி - 15.2, எடப்பாடி - 15.6. மேட்டூா் - 13.2. ஓமலூா் - 14, டேனீஷ்பேட்டை - 17 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 713.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.