கஞ்சமலை முருகன் கோயிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு
கஞ்சமலை சித்தா் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் காா்த்திகை மாத கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.
இவ்விழாவில் சித்தா் கோயில், இடங்கணசாலை, காடையாம்பட்டி, புளியம்பட்டி, பரமகவுண்டனூா், இளம்பிள்ளை, பெருமாகவுண்டம்பட்டி, கே.கே.நகா், முருங்கப்பட்டி, லகுவம்பட்டி, ஏழுமாத்தனூா், நாயக்கன்பட்டி, நல்லணம்பட்டி, பெத்தாம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.