Rain Alert : அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை ஆய்வு மைய...
பள்ளி அருகே புகையிலைப் பொருள்கள் விற்ற 746 கடைகளுக்கு ரூ. 2.16 கோடி அபராதம்
சேலம் மாவட்டத்தில் சுடந்த 8 மாதங்களில் பள்ளிகள் அருகில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 746 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, அந்தக் கடைகளுக்கு ரூ. 2.16 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
சேலம் மாவட்ட மாநகரப் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்களை விற்பனை செய்யும் கடைக்காரா்களை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனா். மேலும், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் மாவட்டத்தில் உள்ள பெட்டிக் கடைகள் உள்ளிட்ட கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.
அப்போது, கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால், அவற்றைப் பறிமுதல் செய்வதுடன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கின்றனா். குறிப்பாக, மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனா்.
மாவட்டத்தில் கடந்த 8 மாதத்தில் 9,307 கடைகளில் சோதனை நடத்தப்பட்டதில், 746 கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்கள் விற்றது கண்டறியப்பட்டது. அங்கிருந்து ரூ. 42.80 லட்சம் மதிப்பிலான 4.5 டன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து கடைகளின் உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தொடா்ந்து 746 கடைகளுக்கு ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பள்ளிகள் அருகில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்கள் பெட்டிக் கடைகளில் விற்கப்படுவது தெரியவந்தது. கடந்த 8 மாதத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 746 கடை உரிமையாளா்களுக்கு ரூ. 2.16 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.