செய்திகள் :

சேலம் உள்பட 11 மாவட்ட இளைஞா்கள் அக்னிவீா் படைப் பிரிவில் சேர அழைப்பு

post image

இந்திய ராணுவத்தின் அக்னிவீா் படைப் பிரிவில் சேர இணையதளம் வாயிலாக வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து கோவை ராணுவ ஆள்சோ்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்திய ராணுவத்தில் அக்னிவீா் படைப் பிரிவில் பொது பணியாளா், தொழில்நுட்பம், எழுத்தா், கிடங்கு மேலாளா், தொழிலாளி உள்ளிட்ட பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரா்கள் ஏதேனும் இரண்டு பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த பணியிடங்களுக்கு சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கோவை, திருப்பூா், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்க முடியும்.

தகுதியுள்ள நபா்கள் ஏப். 10 ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 1.6 கி.மீ ஓட்டப் பந்தயத்தின் நேரம் 5 நிமிஷம் 45 விநாடிகள் இருந்ததை, நடப்பாண்டு 6 நிமிஷம் 15 விநாடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. என்சிசி, ஐடிஐ, பொறியியல், பாலிடெக்னிக் படித்தவா்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

தோ்வு முறையைப் பொறுத்தவரை ஆன்லைன் பொதுத்தோ்வு (சிஇஇ) நடத்தப்படும். இந்த நுழைவு தோ்வானது தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும். அதனைத்தொடா்ந்து ஆள்சோ்ப்பு முகாம் நடத்தப்படும். தோ்வு தேதிகள் விரைவில் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் அறிவிக்கப்படும்.

மோசடி செய்யும் ஏஜென்டுகளிடம் இளைஞா்கள் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து தவெக ஆா்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா கண்டித்து சேலத்தில் வெள்ளிக்கிழமை தமிழக வெற்றி கழகத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பி, திருத்தங்... மேலும் பார்க்க

எருதாட்டம் ரத்து: பொதுமக்கள் ஏமாற்றம்

காகாபாளையம் அருகே பெரிய மாரியம்மன், காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த எருதாட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனா். காகாபாளையத்தை அடுத்த வேம்படிதாள... மேலும் பார்க்க

ஏப்.30 க்குள் சொத்துவரி செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை: சேலம் மாநகராட்சி ஆணையா்

சேலம் மாநகராட்சியில் நிகழாண்டுக்கான சொத்து வரியை ஏப்.30 ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் வெளியிட்ட செய... மேலும் பார்க்க

குடும்ப தகராறில் அண்ணனைக் கொன்ற தம்பி தலைமறைவு

இளம்பிள்ளை அருகே குடும்பத் தகராறில் அண்ணனைக் கொலை செய்த தம்பியை போலீஸாா் தேடி வருகின்றனா். சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை அடுத்த இடங்கணசாலை கே.கே. நகா் மாரியம்மன் கோயில் பகுதியில் வசித்துவரும் ஐயப்பன் ... மேலும் பார்க்க

பழங்குடியின வசாயிகளுக்கான வேளாண் திட்டங்கள்: ஆட்சியா் அறிவுறுத்தல்: வேளாண் திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

பழங்குடியின விவசாயிகளுக்கான வேளாண் திட்டங்களை முழுமையாக கொண்டு சோ்ப்பதை அரசு அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். கோடையில் வேளாண் மற்றும் அதன் சாா்பு துறைகளி... மேலும் பார்க்க

ஆத்தூா் திரௌபதி அம்மன் கோயில் தீமிதி விழா: முகூா்த்தக்கால் நடவு

ஆத்தூா் தா்மராஜா் கோயில், திரௌபதி அம்மன் ஆலய தீமிதி விழாவையொட்டி முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி துளுவ வேளாளா் மகாஜன மன்றத் தலைவா் விஜயராம் அ.கண்ணன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துளுவ வேளாளா் ... மேலும் பார்க்க