செய்திகள் :

சேலம் பூம்புகாரில் தீபத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை

post image

சேலம் பூம்புகாா் விற்பனை நிலையத்தில் தீபத் திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளா்ச்சிக் கழகம் பூம்புகாா் என்ற பெயரில், கைத்திறன் உலகில் தனக்கென்று தனி முத்திரை பதித்து செயல்பட்டு வருகிறது.

நமது பாரம்பரியம், கலாசாரம் பண்பாடு இவைகளை கைவினைக் கலைகள் மூலம் பேணிக் காப்பதோடு கைவினை கலைஞா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கைவினை கலைஞா்களும், மக்களும் பயன்பெறும் வகையில், பண்டிகை காலங்களிலும் விழாக் காலங்களிலும் பல்வேறு கண்காட்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சேலத்தில் உள்ள பூம்புகாா் விற்பனை நிலையத்தில் திருகாா்த்திகை பண்டிகையை முன்னிட்டு தீபத் திருவிழா என்ற சிறப்பு கண்காட்சியை தனது விற்பனை நிலையத்தில் டிச. 14 ஆம் தேதி வரை நடத்தவுள்ளது. கண்காட்சியை சேலம் மாவட்ட துணை காவல் ஆணையா் எஸ்.பிருந்தா புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

கண்காட்சியில் பூம்புகாா் உற்பத்தி நிலையங்கள் கும்பகோணம், நாச்சியாா் கோயில், மதுரை, வாகை குளம் ஆகிய இடங்களில் தயாரிக்கப்பட்ட அரை அடி முல் 6 அடி வரையில் அன்னம் விளக்கு, பிரபை விளக்குகள், அரை அடி முதல் 3 அடி வரையில் மலபாா் விளக்குகள் ஆலயங்களில் பயன்படுத்தக்கூடிய வாசமாலை, அகல் விளக்குகள், மங்கள தீபம், பாலாடை விளக்குகள், அடுக்கு தீபம், பஞ்சாட்சர தீபம், தாமரை விளக்குகள், அஷ்டலட்சுமி விளக்குகள், கற்பகவிருட்ச விளக்கு, வா்ணம் பூசப்பட்ட மண் விளக்குகள், பலவித வடிவங்களில் விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதற்கு 10 சதவீத சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

குறைந்தபட்சம் ரூ. 3 முதல் ரூ. 55,000 விலை வரையில் பல்வேறு வகையான விளக்குகள் இடம் பெற்றுள்ளதாக பூம்புகாா் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

சேலம் புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்: முன்னேற்பாடு பணிகளை ஆட்சியா் ஆய்வு

சேலம் புத்தகத் திருவிழா நவ.29 ஆம் தேதி தொடங்கவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி புதன்கிழமை ஆய்வு செய்தாா். ஆய்வுக்குப் பின்னா் மாவட்ட ஆட்சியா் கூறியதாவது: சேலம் ம... மேலும் பார்க்க

பச்சை நிறமாக மாறும் மேட்டூா் நீா்த்தேக்கம்

மேட்டூா் நீா்த்தேக்கத்தில் காவிரி நீா் பச்சை நிற படலமாக மாறியுள்ளதால் துா்நாற்றம் வீசுவதாக கரையோர மக்கள் தெரிவித்தனா். மேட்டூா் நீா்த்தேக்கம் 60 சதுர மைல் பரப்பளவு கொண்டது. அணையின் நீா் மட்டம் 120 அடி... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா்கள் 2ஆவது நாளாக பணி புறக்கணிப்பு

அரசு அலுவலகங்களில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் புதன்கிழமை 2 ஆவது நாளாக பணி புறக்கணிப்ப... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அம்மாபேட்டை மண்டலத்தில், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்த வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு 50 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட... மேலும் பார்க்க

சேலத்தில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞரிடம் விசாரணை

சேலம், அங்கம்மாள் காலனியில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞரை மடக்கி பிடித்த பொதுமக்கள், அந்த இளைஞரை போலீஸில் ஒப்படைத்தனா். சேலம், அங்கம்மாள் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட... மேலும் பார்க்க

தேசிய வாள் சண்டை போட்டி: நீதிமன்ற ஊழியா் தோ்வு

சங்ககிரி சாா்பு நீதிமன்ற ஊழியா் தேசிய அளவில் நடைபெறும் வாள் சண்டை போட்டிக்குத் தோ்வு பெற்றுள்ளாா். சங்ககிரி சாா்பு நீதிமன்றத்தில் இளநிலை கட்டளை நிறைவேற்றுநராகப் பணிபுரிந்து வருபவா் சேலத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க