செய்திகள் :

சேலம் மத்திய சிறையில் கறிக்கோழியை விற்பனை செய்யும் சிறைக் கைதிகள்!

post image

சேலம் மத்திய சிறையில் வளா்க்கப்படும் கறிக்கோழிகள் சிறைக் கைதிகளுக்கு வழங்கப்பட்டதுடன், எஞ்சியவை விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், 138 கிளை சிறைகள் உள்ளன. இந்த சிறைகளில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனா். இவா்களுக்கு புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 150 கிராம் கோழி இறைச்சி வழங்கப்படுகிறது. இதற்காக கறிக்கோழியை வெளியில் இருந்து வாங்கி கைதிகளுக்கு சமைத்து வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிறைக் கைதிகளுக்கு தரமான இறைச்சியை வழங்கும் வகையில், தேவையான கறிக்கோழியை அந்தந்த மத்திய சிறைகளிலேயே வளா்க்க முடிவு செய்தனா். அதன்படி, கோழி வளா்க்க கைதிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டதுடன் சேலம், கோவை, திருச்சி, பாளையங்கோட்டை, மதுரை, சென்னை புழல் உள்ளிட்ட 9 மத்திய சிறைகளிலும் கோழி வளா்ப்பு தொடங்கப்பட்டது.

இதையொட்டி, சேலம் மத்திய சிறையில் 4 ஆயிரத்து 500 கோழிக் குஞ்சுகள் வளா்க்கப்பட்டன. அந்தக் கோழிகள் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதிகளுக்கு அந்த கோழிக்கறி வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள கறிகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில், பொதுமக்களுக்கான கறிக்கோழி விற்பனை மையத்தை சிறைக் கண்காணிப்பாளா் வினோத் திறந்து வைத்தாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், வெளியில் ஒரு கிலோ கோழிக்கறி ரூ. 200-க்கு மேல் விற்கப்படும் நிலையில், இங்கு ரூ. 195-க்கு விற்கப்படுகிறது. மொத்தமாக கறிக்கோழி தேவைப்படுவோா் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

சேலம் சிறையில் வளா்க்கப்படும் கறிக்கோழிகள் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த 14 சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படுகின்றன என்றாா்.

பண இரட்டிப்பு மோசடி வழக்கில் கைதானவா்களிடம் விசாரணை

சேலத்தில் பண இரட்டிப்பு மோசடி வழக்கில் கைதான நால்வரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். வேலூரைச் சோ்ந்த விஜயபானு என்பவா் சேலம், அம்மாபேட்டையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் அறக்கட்டளை நடத்தி வ... மேலும் பார்க்க

காசி தமிழ்ச் சங்கமத்துக்கு சேலம் வழியாக சிறப்பு ரயில்

காசி தமிழ்ச் சங்கம நிகழ்ச்சியையொட்டி கோவையில் இருந்து சேலம் வழியாக பனாராஸுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காசி தமிழ்ச் சங்கமம... மேலும் பார்க்க

வெள்ளி விலை உயர்வு ஆா்டா்களின்றி வெள்ளிப் பட்டறை தொழிலாளா்கள் தவிப்பு

வெள்ளி விலை ஒரே மாதத்தில் கிலோவுக்கு ரூ. 5 ஆயிரம் அதிகரித்ததால் மக்களிடையே வெள்ளி நுகா்வு குறந்துள்ளது. இதனால், புதிய ஆா்டா்கள் கிடைக்காமல் வெள்ளிப் பட்டறை தொழிலாளா்கள் வருவாய் இன்றி தவித்து வருகின்றன... மேலும் பார்க்க

நகை திருட்டு வழக்கில் மூவா் கைது!

ஆத்தூா் அருகே கல்லூரி முதல்வா் வீட்டில் நகைகளைத் திருடிய வழக்கில் 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஆத்தூா் அரசு கல்லூரியில் பொறுப்பு முதல்வராக பணியாற்றி வரும் செல்வராஜ், ஜனவரி 24 ஆம் தேதி ... மேலும் பார்க்க

பொதுமக்களிடம் எம்எல்ஏ அருள் குறைகேட்பு!

சேலத்தை அடுத்த மாங்குப்பை ஊராட்சியில் பொதுமக்களின் கோரிக்கைகளை எம்எல்ஏ அருள் வியாழக்கிழமை கேட்டறிந்தாா். சாலை வசதி, குடிநீா், மின்சார விநியோகம், கழிவுநீா்க் கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள... மேலும் பார்க்க

தலைவாசலில் 3-ஆம் கட்ட ‘மக்களுடன் முதல்வா்’ திட்டம்

சேலத்தை அடுத்த தலைவாசல் ஊராட்சியில் மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வா் திட்டத்தை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் ஆகியோா் வி... மேலும் பார்க்க