இந்தியா்கள் தவறாக நடத்தப்படாததை அரசு உறுதிப்படுத்தும்! -அமைச்சா் ஜெய்சங்கா்
காசி தமிழ்ச் சங்கமத்துக்கு சேலம் வழியாக சிறப்பு ரயில்
காசி தமிழ்ச் சங்கம நிகழ்ச்சியையொட்டி கோவையில் இருந்து சேலம் வழியாக பனாராஸுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியையொட்டி, கோவை - பனாரஸ் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், கோவையில் இருந்து பிப்ரவரி 16 ஆம் தேதி காலை 6.35 மணிக்குப் புறப்பட்டு திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை வழியாக பிப். 18-ஆம் தேதி காலை 7.15 மணிக்கு பனாரஸை சென்றடையும்.
மறு மாா்க்கத்தில் பனாராஸிலிருந்து பிப்ரவரி 22 ஆம் தேதி அதிகாலை 2 மணிக்குப் புறப்பட்டு பிப். 24-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கோவையை வந்தடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.